உள்ளடக்கத்துக்குச் செல்

பாழும் திருமண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நடுவிலிருக்கும் திருமண் காப்பின் மத்தியிலுள்ள சிவப்புக் கோட்டை நீக்கிப்பார்த்தால் அது பாழும் திருமண் ஆகும்.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாழும் திருமண், .

பொருள்

[தொகு]
  1. அமங்கலமான/முழுமைப் பெறாத திருமண்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. the hindu vaishnavite sign of thiruman short of middle red line

விளக்கம்

[தொகு]
  • வைணவர்கள் இறந்த தம் தாய்/தந்தையருக்கு அவர்கள் இறந்தபின் ஈமச்சடங்குகளை முதன்முறையாகச் செய்யும்போது பிண்டம் கொட்டுதல் முதலான அசுப காரியங்கள் முடிவடைந்து சுபம் செய்யப்படும் வரை அவர்கள் நெற்றியில் அணிந்துகொள்ளும் நாமம் என்னும் திருமண்ணின் நடுவில் திருசூரணத்தினாலான சிவப்புக்கோடு இடமாட்டார்கள்...வெறும் இரண்டு, நாமக்கட்டியினால் போடப்படும், வெள்ளைக் கோடுகள் மாத்திரமே அணிவர்...வலது, இடது பக்கங்களில் செங்குத்தாக இடப்படும் இரண்டு வெள்ளைக்கோடுகளும்,அவைகளின் நடுவில் சிவப்புக் கோடும் சேர்ந்ததுதான் ஒரு முழுத் திருமண்...மேற்படி சிவப்புக்கோடு இல்லாத குறையுள்ளத் திருமண்ணை பாழும் திருமண் என்பர்...அதாவது அமங்கல காலத்தில் அணியும் திருமண் என்று பொருள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாழும்_திருமண்&oldid=1220127" இலிருந்து மீள்விக்கப்பட்டது