பிராந்தியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பிராந்தியம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. நிலப்பகுதி
  2. வட்டாரம்
  3. பிராந்தம்
  4. பிரதேசம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. area
  2. a specified part of great land mass
  3. locality
  4. region

விளக்கம்[தொகு]

பிறமொழிச்சொல்..பிராந்த1-ம் என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து உருவானது...உலக நிலப் பரப்பு, ஒரு பெரிய நாடு அல்லது பெரிய மாநிலத்தின் உட்பகுதிகளான குறிப்பிட்ட நிலப்பகுதி, மண்டலம் அல்லது வட்டாரத்தை ஒரு குறிப்புப் பெயரோடுச் சேர்த்து பிராந்தியம் எனக் குறிப்பிடுவர்...எ.கா..கோவை பிராந்தியம், கேரள பிராந்தியம், ஆசிய பிராந்தியம்...

பயன்பாடு[தொகு]

  • உரிச்சொல்லாக...
சென்னை மாநகரில் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற எல்லா பிராந்திய மக்களும் குடியேறுகிறார்கள்....ஆகவே இந்தியாவின் எல்லா பிராந்திய மொழிகளின் பேச்சுகளையும் கடை வீதிகளில் இங்கு கேட்கலாம்...மேலும் அநேக பிராந்திய உணவு வகைகளும் சென்னையில் சாப்பிடக் கிடைக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் ---பிராந்தியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிராந்தியம்&oldid=1223020" இலிருந்து மீள்விக்கப்பட்டது