புட்கரணி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
புட்கரணி, .
பொருள்
[தொகு]- கோவிலில் உள்ள திருக்குளம்
- புட்கரத்தீவு
- குய்யாட்டக புவனங்களில் ஒன்று.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- temple tank
- an annular continent
- a spiritual world
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...(1)पुष्करिणी...பு1-ஷ்க1-ரிணி...புட்கரணி... கோவில்களிலுள்ள குளங்களுக்கு சிறப்பாக தாமரைப் பூத்தக் குளங்களுக்கு புட்கரணி என்று பெயர்...புட்கரணி என்பதுதான் தமிழில் கேணி எனப்பட்டது...எ.கா திருவல்லிக்கேணி.. பழைய நாட்களில் இந்தக் குளத்துத் தண்ணீரைத்தான் கோவில் தேவைகளுக்குப் பயன்படுத்தினர்...சேத்திர தலங்களின் குளத்து நீர் புனித நீராகவும் கருதப்படுகிறது...புட்கரணி என்னும் சொல் பொதுவாக குளம் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது...
- (2)पुष्कर...புஷ்கர...புட்கரணி...புட்கரம் எனப்படும் தீவு
இலக்கியம்
[தொகு](குளம் என்னும் பொருளில்)
ஏவி இடர்க் கடல் இடைப்பட்டு இளைக்கின்றேனை
இப்பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே
கூவி அமர் உலகு அனைத்தும் உருவிப் போகக்
குறியில் அறு குணத்து ஆண்டு கொண்டார் போலும்
தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை
சரசுவதி பொற்றாமரை புட்கரணி.. தெள் நீர்க்
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
- திருநாவுக்கரசர்..தேவாரம்..திருமுறை.