புணர்ச்சியிலக்கணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • புணர்ச்சியிலக்கணம், பெயர்ச்சொல்.
  1. இரண்டு வார்த்தைகள் இணையும்போது உச்சரிப்பில் உண்டாகும் மாற்றமாகும்.பெரும்பாலான மொழிகளில் எழுத்து வடிவம், சந்தியைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் எழுத்து இலக்கணத்தில் சந்தி ஒரு விதிமுறையாக உள்ளது.
    இரண்டு சொற்கள் இணையும் போது முதலில் உள்ள சொல் நிலைமொழி என்றும் வந்து இணையும் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். தொல்காப்பியத்தில் இவை நிலைமொழி- குறித்துவரு கிளவி என குறிப்பிடப்படுகின்றன. சொற்கள் புணரும்போதும் ஒரு எழுத்து தோன்றுதல் அல்லது சொல்லின் இறுதி எழுத்து வேறொரு எழுத்தாக மாறுதல் அல்லது ஒரு எழுத்து மறைதல் (கெடுதல்) போன்ற மாறுபாடுகள் தோன்றும். தமிழ்மொழியில் தோன்றும் இந்த மாறுபாடுகளை விகாரம் அல்லது திரிபு என வழங்குகிறோம். மாறுபாடுகள் தோன்றாமல் சொற்கள் புணரும் நிலையை இயல்புப் புணர்ச்சி என்கிறோம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the rules to combine two words in Tamil and Sanskrit



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புணர்ச்சியிலக்கணம்&oldid=1197721" இலிருந்து மீள்விக்கப்பட்டது