புதியன் மூலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
புதியன் மூலி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

Mentha Sativa/Mentha asiatica...(தாவரவியல் பெயர்))

புதியன் மூலி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு கீரை வகை.
  2. இரத்த மூலி
  3. புதியனா
  4. புதினா
  5. புதீனா

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. mint leaves

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...உருது...நறுமணமிக்க ஒரு கீரைவகை...உணவுகளுக்கு மணமூட்டவும், உருசி கூட்டவும் பயனாகிறது...மருத்துவ குணங்களுள்ள தாவரம்...

மருத்துவ குணங்கள்[தொகு]

  • இந்தக்கீரையால் அருசி, சர்த்தி, மந்தாக்கினி, இரத்த தாதுவின் அழுக்கு, மலப்போக்கு இவைகள் நீங்கும்...உணவையும் விருப்பமாகச் சாப்பிடவைக்கும்...

உணவாக பயன்படுத்தல்[தொகு]

  • புதியன் மூலியைச் சிறிது நெய்விட்டு வதக்கி, அதனுடன் புளி, மிளகாய், உப்பு ஆகியவைகளைத் திட்டமாக வைத்து அரைத்துத் துவையலாகச் சோற்றுடன் கலந்து உண்டால் தீபனத்தை உண்டாக்கி வாயுவைக் கண்டிக்கும்...இதை சர்பத்து செய்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, குமட்டல், செறியாமை, மயக்கம், மார்பு எரிச்சல் முதலியவைகள் போகும்..


"https://ta.wiktionary.org/w/index.php?title=புதியன்_மூலி&oldid=1227046" இருந்து மீள்விக்கப்பட்டது