உள்ளடக்கத்துக்குச் செல்

புல் பூண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

புல் பூண்டு

சொல் பொருள்

புல் – நிலத்தைப் புல்லிக் கிடப்பவை(தழுவிக் கிடப்பவை) புல்லாம். பூண்டு – புல்லினும் உயர்ந்து நிற்பது.

விளக்கம்

முன்னது தாளால் பயனாவது, பின்னது கிழங்கால் பயனாவது. ‘புல்லாகிப் பூடாகி’ என்பது திருவாசகம். பூடு-பூண்டு. கூண்டு – கூடு ஆவது போல ஆயது.

தென்னை பனை உயர்ந்து ஓங்கியவை எனினும் ‘புல்லினம்’ எனப்பட்டது. புல்லின் தன்மையாய உட்டுளை யுடைமையால் என்க. புல்-புள்-பொள்-பொள்ளல்-பொய் – பொத்தல் என்பன வெல்லாம் உள்ளீடு இன்மைப் பொருளனவே. பூடும் பூண்டும் வெள்ளைப் பூடு வெள்ளைப் பூண்டு என்பவற்றால் அறிக.

"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்_பூண்டு&oldid=1913106" இலிருந்து மீள்விக்கப்பட்டது