பெரிய திருவடி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
பெரிய திருவடி, .
பொருள்
[தொகு]- திருமாலின் வாகனமான கருடன்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- garuda the vehicle of a hindu god mahavishnu.
விளக்கம்
[தொகு]- பெரிய + திரு + அடி = பெரிய திருவடி...இறைவன் திருமாலின் வாகனமான கருடனுக்கு ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் வழங்கும் சிறப்புப் பெயர்...திருமாலின் வாகனமாக என்றும் எப்போதும் அவருக்குத் தொண்டு செய்துக்கொண்டிருப்பதால் திருமாலின் அடி(யார்) என்று புகழப்பட்டு, திருமாலை சுமந்து செல்லும் பெரும் பாக்கியத்தைப் பெற்றதால் 'திரு' என்ற சிறப்புச் சொல்லையும் சேர்த்து திருவடி (திரு+அடி) எனப்பட்டார்...எப்போதும் இறைவனின் வாகனமான கருடன் பெரிய திருவடி என்றும் அனுமன் சிறிய திருவடி என்றும் போற்றப்பட்டனர்...கருடன் திருமாலுக்கு செய்துவரும் சிறப்பான தொண்டின் காரணமாக அவர் கருடாழ்வார் என்றும் குறிப்பிடப்படுகிறார்.