உள்ளடக்கத்துக்குச் செல்

பெருமாள் தீர்த்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சாரங்கபாணி பெருமாள் கோவில்/கும்பகோணம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பெருமாள் தீர்த்தம், .

பொருள்

[தொகு]
  1. பெருமாள் கோவில்களில் பருகத் தரப்படும் புனித நீர்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. holy water being given to drink in vishnu temples.

விளக்கம்

[தொகு]
  • தமிழும் வடமொழியும் கலந்த ஒரு சொல்...தீர்த்தம் எனில் வடமொழியில் நீர் எனப் பொருள்...பெருமாள் கோவில்களில் பூசையில் இறைவனுக்குப் படைத்தபின் பக்தர்களுக்குப் பருகத் தரப்படும் சர்வார்த்த தோயம் என்னும் நீர்...ஏலக்காய் போன்ற வாசனை திரவியங்களும், துளசி இதழ்களும் கலந்திருக்கும்...கடந்த நாட்களில் குளித்துவிட்டு, கோவிலுக்குச் சென்று வழிப்பட்டு இந்த நீரை அருந்திவிட்டுதான், மற்றக் காரியங்களைத் துவங்குவார்கள்... இந்த நீரில் கலந்திருக்கும் ஏலக்காயும் துளசியும் அவைகளுடைய மருத்துவ குணங்களால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு, படபடப்பு இல்லாமல் ஒருவரை வைத்திருக்கும் என்று நம்பப்பட்டது...இதை தீர்த்தப் பிரசாதம் என்றும் சொல்லுவர்...சில ஆச்சார அந்தணர்களின் வீடுகளில் தினமும் திருமாலை வழிபட்டு வீட்டிலுள்ள அனைவருக்கும் பெருமாள் தீர்த்தம் கொடுக்கும் நடைமுறை இன்றும் உள்ளது...அதை பருகியபின் தான் உணவருந்துவர்...


( மொழிகள் )

சான்றுகள் ---பெருமாள் தீர்த்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருமாள்_தீர்த்தம்&oldid=1231902" இலிருந்து மீள்விக்கப்பட்டது