பேச்சு:ஆய்தயெழுத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இதனை ஆய்தயெழுத்து என்றல்லவா எழுதி பார்த்திருக்கிறேன். --இராஜ்குமார் 05:53, 13 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஆய்தவெழுத்து என்றுசென்னைப்பல்கலைக்கழக பேரகரமுதலி கூறுகிறது. அப்பெயருக்கு மாற்றிவிடலாமா?--06:08, 13 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
ஆய்தவெழுத்து என்பது பழய வழக்கு, இப்பொழுது ஆய்தயெழுத்து என்று தான் தமிழ் நாட்டுப் பாட நூல்களில் குறிப்பிடுகின்றனர். ஆகையால், பழய சொல்லில் இருந்து புதிய சொல்லிற்கு பக்கவழி மாற்றம் செய்யுங்கள். அதே போல் ஆய்தம் என்ற சொல்லில் இருந்தும் பக்கவழி மாற்றம் செய்யுங்கள். ஆனால் ஆய்தெழுத்து என்பது தவறானது. --இராஜ்குமார் 06:16, 13 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
சரி.வரலாற்றைக் காட்டவும் என்றவசதிக்கு, அடுத்தே பக்கத்தை நகர்த்தும்வசதி உங்களுக்கும் உள்ளது. --06:43, 13 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
பக்கத்தை நகர்த்தும் போது, தவறான தலைப்பு என்றால் கீழுள்ள வழிமாற்று இல்லாமல் பக்கத்தை நகர்த்து என்று தெரிவு செய்தபிறகு வழிமாற்றினால், இது போல பிழைகள் வராது. மேலும்,{{delete}.} என்ற வார்ப்புருவினை இட்டால் மற்ற நிருவாகிகளும் நீக்குவர். 12மேலாண்மைஅணுக்கம் பெற்றவர், தமிழ் விக்சனரியில் உள்ளனர். பதிவுசெய்யப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை-3684 ஆகும். எனவே, 100 நீக்கவேண்டிய பக்கங்கள் இருப்பின், அதனை அந்த வார்ப்புரு இட்டால். இப்பகுப்பில் அது பட்டியலிடப்படும். அதனை கவனிக்கும் அணுக்கப் பெற்றவர் நீக்குவர். அணுக்கம் உள்ளவர், அனைவரும் உரையாடல் பகுதிகளை கவனிக்க மாட்டர். இப்பகுப்பில் பட்டியலிடப்பட்டாலே நீக்குவர். இப்பொழுது வேலைக்குச் செல்கிறேன். நாளை சந்திப்போம்.வணக்கம்--07:22, 13 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஆய்தயெழுத்து&oldid=1007127" இலிருந்து மீள்விக்கப்பட்டது