பேச்சு:எறும்புத்தின்னி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

SH Prater எழுதிய The book of Indian animals என்னும் நூலில் எரும்புத்தின்னியைத் தமிழில் அழுங்கு என விளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆர்மடில்லோ மற்றும் ஏனைய கவச உடலிகளை அழுங்கு என்று அழைக்கப்படுவதற்கு இலக்கியச் சான்று பகர்ந்தால் சிறப்பாக இருக்கும். 17:43, 13 சூன் 2011 Singamugan

இந்த சொல் நவம்பர் 2010 அன்று உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பே சனவரி 2010 அன்றே அழுங்கு உருவாக்கப்பட்டுள்ளது. சொல்வளம் என்பதில் அழுங்கு இச்சொல்லுடன் இணைக்கப் பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மன்னிக்கவும். கவனக்குறைவாக விட்டுவிட்டேன். நீங்கள் சொன்ன நூலில் உள்ள பிற பெயர்களையும் அறிய ஆவல். --01:35, 14 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
இந்த நூலின் முதல் பதிப்பு 1948ம் ஆண்டு வெளியானது. இதில் இந்தியப் பாங்கோலின் (The Indian Pangolin - Manis crassicaudata) என அறியப்படும் எரும்புத்தின்னிகள் அழுங்கு என்னும் பெயரைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
  • அதேப் போல் The common dolphin என அறியப்படும் Delphinus delphis இன் தமிழ்ப்பெயர் pomigra எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இது இந்நூலில் இந்தியக் கடல் பாலூட்டிகள் என்றத் தலைப்பின் கீழ் வரையப்பட்டுள்ளது. இப்பெயரை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதன் உண்மையானத் தமிழ்ப்பெயர் என்பது கண்டறிய முயன்றால் டால்பின் என விளிக்கப்படும் பாலூட்டியின் தமிழ்ப்பெயரை நாமும் அறிய இயலும் என நினைக்கிறேன்.
  • இதேப் போல் Sea cow/Dugong என அழைக்கப்படும் கடற்பாலூட்டியை கடல்புதுரு (Kadalpudru - from SH Prater), avilliah, kadalpandri/kadalpanni என அழைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் பழையப் பெயர்களுக்கு நல்ல மேற்கோளாகத் திகழும் என நினைக்கிறேன். மேலே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளவை நூலில் இருந்துப் பெறப்பட்டது. இயலுமாயின் இதன் மெய்த் தமிழ்ப்பெயரை அறிந்து வெளியிடுமாறுக் கேட்டுக்கொள்கிறேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:26, 21 சூன் 2011 (UTC)[பதிலளி]

விரிவான உங்கள் குறிப்புகள் என்னை அந்நூலைக் காணத்தூண்டுகிறது. எப்படி? -- உழவன் (Info-farmer)+உரை..

இந்நூலை நான் ஃப்ளிப்கார்ட் என்னும் இணைய விற்பனைத் தளத்திலிருந்துப் பெற்றேன். இதன் தற்போதையப் பதிப்பின் விவரம் பின்வரும் தளமுகவரியிலிருந்துப் பெற்றுக்கொள்ளலாம். http://www.flipkart.com/sem/book/p/book%20of%20indian%20animals%20prater%20s%20h?gclid=COHF7sTMyakCFQx66wodWnSsNw நன்றிகளுடன். --சிங்கமுகன் 13:19, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:எறும்புத்தின்னி&oldid=968598" இலிருந்து மீள்விக்கப்பட்டது