பேச்சு:க‌ச்சை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தகவல் உழவன் போன்ற நண்பர்களின் கவனத்திற்கு, கச்சை என்பதில் இலக்கியங்களில் ஆண்கள் கட்டுகின்ற இடுப்பணியாகவும் அறியப்பட்டுள்ளது. நவீனத்தில் வந்த பிராவிற்கு மார்புக் கச்சை என்று வேண்டுமானும் தரலாம். இடைக் கச்சை, மார்புக் கச்சை என்ற இரண்டையும் கச்சை பக்கத்தில் குறிப்பிட வேண்டும். எனவே இதனை கவனத்தில் கொள்ளுங்கள். நன்றி - சகோதரன் ஜெகதீஸ்வரன்

நீலக் கச்சைப் பூவார் ஆடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் - உலோச்சனார்

பொருள் : நீல நிறமுடைய கச்சையையும், பூவேலைப்பாடுகள் நிறைந்த ஆடையையும், மயில் தோகையால் தொடுக்கப்பட்ட மாலையையும் உடைய பெரியோனாகிய வீரன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:க‌ச்சை&oldid=1476074" இலிருந்து மீள்விக்கப்பட்டது