பேச்சு:வீணன்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
அறுவீனன் என்பது அறிவு ஈன நிலைல் உள்ளவன் என்று பொருள்படும். ஈனம் என்பது குறைவைக் குறிக்கும் வடமொழிச்சொல் (ஃகீன என்னும் சொல்). ஆனால் அறிவீணன் என்பது அறிந்தே வீணனாக உள்ளவன் என்று பொருள்படுமோ? அறிவீனன் = அறிவுகுன்றியவன் (அறிவற்றவன் என்று பொதுவாக உணரப்படும் சொல்). அறிவு இளைத்தவன் என்பது சற்று வேறான பொருள் தருவது! அறிவுக்கூழையன் என்றால் அறிவு இல்லாதவன் அல்லது அறிவு குட்டையாயனவன் (குன்றியவன்) என்று பொருள்படும். கூழை (வால் இல்லாத, ஏதோ ஒன்று உள்ளே அல்லது பின்னே இல்லாத) என்பதும் நல்ல சொல். கூழைக்கும்பிடு என்றால் உள்ளே உண்மையான மதிப்பு, அன்பு இல்லாமல் வெளிப்பகட்டாக குழைந்து (நடித்துக்) கும்பிடு போடுவது. இங்கு கூழை என்பது உள்ளே அன்பு, மதிப்பு இல்லாமையை, நடிப்பைச் சுட்டுவது. (பொய்க்) குழைவையும் சுட்டுவது!!--செல்வா 16:50, 28 மே 2011 (UTC)
- ஈனம் என்பது வடமொழி என்பதில் எனக்கு ஐயம் உள்ளது. தாங்கள் இதை விளக்க விரும்புகிறேன். ஏனெனில், றனகரம் என அழைக்கப்படும் ‘ன’ வடமொழியில் இல்லை என்பதே நான் அறிந்தது. இது தமிழுக்கே உரித்தானது எனவும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும், வீணன் என்னும் வார்த்தையின் பொருள் பயனற்றவன் என்பதே உண்மை. இங்கு, அறிவு மழுங்கினவகையில் செயல்படுகிறான் என்பது அறிவு இருந்தும் மழுங்கின அல்லது இல்லாத நிலையில் செயல்படுகிறான் எனப் பொருள் கொள்கிறது. நன்றிகளுடன். --சிங்கமுகன் 15:33, 8 சூன் 2011 (UTC)
- சமசுக்கிருதத்தில் அது தகர ந. றகர ன அல்ல. தேவநாகரி எழுத்தில் हीन (ஒலிப்பு ஏறத்தாழ ஃகீந). இதன் பொருள் பல மோனியர் வில்லியம்சு அகரமுதலியில் hIna என்று இட்டுத் தேடிப் பாருங்கள்: http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/ தமிழில் பலகீனம், அறிவீனம், பொருளாதர நிலை, உடல்நிலை ஹீன நிலையில் உள்ளது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கலாம், மிகக் குறைந்த ஒலியில் முணகுவதை ஈனக்குரல் என்றும் சொல்லக் கேட்டிருக்கலாம். அதில் வரும் -ஈனம் என்பது இதே சொல்தான். இப்போதைக்கு இது சமசுக்கிருதச்சொல் என்று பிறர் சொல்வதை நாம் ஏற்கவேண்டியுள்ளது. தமிழில் இழி, ஈ என்பதோடு தொடர்புடையதாகவும் இருக்கலாம். ஆனால் இதனை யாரேனும் நிறுவவேண்டும் :)--செல்வா 22:40, 9 சூன் 2011 (UTC)