பேச்சு:வெதுப்பகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வெதுப்பகத்தில் “இனியப்பம்” சுடப்படுகின்றதா?

அடுப்பு நெருப்பின் சூட்டின் அளவு கடுமையாகவும் இல்லாமல், இலேசாகவும் இல்லாமல் ஒரு வெதுவெதுப்பான தன்மையில் வேக வைக்கும் இடமே “வெதுப்பகம்” எனப்படுகின்றது.

எனவே வெதுவெதுப்பான சூட்டில் வேகவைத்து எடுப்பது:

  • வெதுப்பி (Bபிறட்)
  • மென்வெதுப்பி – (Bபணிஸ்)

“இனியப்பம் என்று ஒரு வகை உணவு உள்ளதா? அல்லது இடியப்பத்தைத் தான் இனியப்பம் என்றால் இடியப்பம் வேகவைத்து எடுக்கும் உணவு அல்ல அவித்து எடுப்பது. --HK Arun 20:45, 28 ஜனவரி 2009 (UTC)

இனியப்பம் என்று கேக் (cake) ஐச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். bread என்பதைத் தமிழில் 'பிரடு அல்லது 'பிரட், 'பிர'ட் என்று சொல்லலாம். அதே போல 'காந்தி, 'பாபு, 'தாதாபாய், . 'டேவிட் அல்லது 'டேவி'ட். இதுபோல முன்கொட்டு ஒன்று இட்டு எழுதினால், ஒலிப்பு மென்மை என்பதை தமிழ் மரபில் இருந்து மாறிவரும் இடங்களில் மட்டும் காட்டலாம்.--செல்வா 14:39, 29 ஜனவரி 2009 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:வெதுப்பகம்&oldid=196477" இலிருந்து மீள்விக்கப்பட்டது