பேச்சு:abuse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  • abuse என்பதற்கு "துர்ப்பிரயோகம்" என்று பயன்படுத்தலாமா?
drug abuse, child abuse, alcohol abuse போன்றன இதற்கு உதாரணங்கள். --சி. செந்தி 16:14, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
துச்^பிரயோகம் (துஷ்பிரயோகம், dhushprayOgam) என்பதைச் சிலர் பயன்படுத்துகின்றனர். பிரயோகம் என்பது இங்கு பயன்பபடு என்னும் பொருளில் வருவது துச்^ என்பது கெட்ட, தவறான என்பது. துர்பிரயோகம் என்று கேட்டதில்லை (நான் கேட்டதில்லை வழக்கத்தில் இருக்காலாம்). அரசனின் ஆட்சியில் தவறான வழிகளில் தன் ஆணணயை ஆட்சி நடத்தையைச் செலுத்தினால் கொடுங்கோல் என்போம். இங்கே கொடும்பயன்பாடு, கொடும்பயனாட்டு, கொடுவழக்கம், கெடுவழக்கம், கெடும்போக்கு, அதிகாரம் முதலியவை கொடுஞ்செலுத்தம், கெடுசெலுத்தம் எனலாம். Drug abuse = வயப்பொருள் கெடுவழக்கம்; child abuse = குழந்தைக்கு கொடுமை, (மாமியார் கொடுமை என்பதுபோல் பெற்றோர் கொடுமை, வளர்ப்போர் கொடுமை என்றும் சொல்லலாம்,); alchohol abuse = குடிப்பழக்கம், குடிவயப்பாடு, முதலியவற்றைப் பரிந்துரைக்கலாம் (இப்போதைக்கு).--செல்வா 18:06, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
    • துர்ப்பிரயோகம் என்பது இலங்கைத் தமிழ் வழக்கில் பயன்படுத்தப்படுகிறது, "துர்ப்பிரயோகம்" என்று கூகிளில் தேடினால் சில சொற் பயன்பாடுகள் கிடைக்கிறது. எ.கா. அதிகாரத் துர்பிரயோகம்.
சொல் வந்த விதம் இப்படி இருக்கலாம்: துர் (கெட்ட) + பிரயோகம்
விக்சனரியில் ஒரு சொல் உள்ளது: துர்நாற்றம் = கெட்ட நாற்றம்
abuse என்பதில் இருந்து ab + use என்று வந்ததைப் போல துர் + பயன்பாடு = துர்ப்பிரயோகம் என்று நினைத்தேன்,
வயம் என்னும் சொல் ஒருவகை ஈர்ப்பு, அடிமைப்படுதல் என்பதனைக் குறிக்கிறது என்றே நம்புகின்றேன், மருத்துவக்கட்டுரை எழுதும் போது எனக்கு வந்த சிக்கலே இது, "தவறாகப் பயன்படுத்துதல்" என்னும் கருத்து வர வேறு ஏதாவது சொற்கள் உள்ளனவா?
--சி. செந்தி 22:32, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:abuse&oldid=774252" இருந்து மீள்விக்கப்பட்டது