பேச்சு:acontecimiento

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இங்கு ஆங்கிலத்தில் பொருள் தரவேண்டியதில்லையே. ஆங்கில விக்சனரி அதற்காகத்தானே உள்ளது. பிறமொழிச் சொற்களுக்குத் தமிழில் மட்டுமே பொருள் தருதல் வேண்டும் அல்லவா?--செல்வா 01:30, 13 மே 2011 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்புகள் மற்றும் பயன்பாடு வார்ப்புருக்கள் விட்டுப்போயுள்ளன என நினைக்கிறேன். ஆங்கிலச் சொல் மொழிபெயர்ப்பு வார்ப்புருவுக்கு அடியில் வரவேண்டியது, தற்போது பொருள் வார்ப்புருவுக்கு அடியில் உள்ளது போல தோற்றமளிக்கின்றது. --Sodabottle 03:04, 13 மே 2011 (UTC)[பதிலளி]
சோடாபாட்டில், அதுவல்ல நான் சொல்ல வந்தது. பிறமொழிச் சொற்களுக்குத் தமிழில் மட்டுமே பொருள் தருதல் வேண்டும். பிறமொழிகளில் மொழிபெயர்ப்பு தருதல் கூடாது!. தமிழ்ச்சொற்களுக்கு மட்டுமே பிறமொழிகளில் மொழிபெயர்ப்பு தருதல் வேண்டும். ஆங்கிலத்தில் பொருள் அறிய ஆங்கில விக்கி அகரமுதலி உள்ளது. ஆங்கிலத்திலோ பிறமொழிகளிலோ இச்சொல்லுக்கு ஈடான சொல் என்ன என்று அறிய, இடப்புறம் உள்ள பட்டியில் உள்ள மொழியின் பெயரைச் சொடுக்கினால் உடனே பெறலாம். இது தமிழ் விக்கி அகரமுதலி அல்லவா? ஆங்கில விக்கி அகரமுதலி அல்லவே :) அருள்கூர்ந்து பிறமொழிச்சொற்களுக்குத் தமிழில் மட்டுமே பொருள் தாருங்கள், அதுமட்டும் அல்லாமல் பிறமொழி பெயர்ப்புகளை இடாதீர்கள். நன்றி.--செல்வா 10:59, 13 மே 2011 (UTC)[பதிலளி]
தமிழ் விக்சனரியின் முதற்பக்கத்தில் கட்டங்கட்டி அறிவித்துள்ள கீழ்க்காணும் அறிவிப்பையும் பார்க்க வேண்டுகிறேன்:ஒரு சொல்லுக்கான வேற்று மொழி விளக்கத்தைக் காண அம்மொழி விக்சனரியைப் பார்க்கவும். 1000 சொற்களுக்கு மேல் உள்ள பிற மொழி விக்சனரிகளுக்கான இணைப்புகள் இடப்பக்கம் உள்ளன..--செல்வா 11:09, 13 மே 2011 (UTC)[பதிலளி]
பின் எதற்காக “மொழிபெயர்ப்பு” என்றொரு பகுதியினை வைத்துள்ளோம். “ பிறமொழி பெயர்ப்புகளை இடாதீர்கள்” என்று எப்படிச் சொல்கிறீர்கள். அனைத்து மொழி விக்சனரிகளிலும் பிறமொழி பெயர்ப்புகளை இடும் வழக்கம் உள்ளது. விக்சனரி என்பதே “பன்மொழி அகரமுதலி”. பிற மொழி இணைச் சொற்களும் கண்டிப்பாகத் தேவை. ஆங்கிலம் மட்டுமல்ல பல சொற்களுக்கும் பிரான்சியம், இந்தி, மலையாளம் போன்ற மொழிபெயர்ப்புகளும் உள்ளன. அதற்காகத் தான் மொழிபெயர்ப்பு பகுதியே உள்ளது. எம்மொழி விக்சனரியாக இருந்தாலும் அம்மொழியில் பொருளும் பிற மொழிகளில் மொழிபெயர்ப்புகளும் தருவது விக்சனரி வழக்கம். பொருளும் விளக்கமும், அந்தந்த விக்சனரி மொழியிலும், பிற மொழி இணைச்சொற்களை மொழிபெயர்ப்பு பகுதியில் இணைப்பதும் தான் விக்சனரிகளின் வழக்கம். பிற மொழி விக்சனரிகளில், அம்மொழியில்லாத சொற்கள் இவ்வாறே சேர்க்கபப்டுகின்றன. (ஆனால் பிற மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் இல்லையென்பதால் பெரும்பாலும் இடுவதில்லை. - ஆழமதிகமுள்ள விக்சனரிகளிலும், நன்றாக உருவாக்கப்படும் சொற்களிலும் இவை இடம் பெறுகின்றன). ஒரு அகரமுதலியில் எவ்வளவு மேலதிகத் தகவல்களைத் தர இயலுமோ அவ்வளவு தரவேண்டும் கூடுதல் மொழிபெயர்ப்புகள் அப்பக்கத்துக்கு வலு சேர்க்கும். ஒரு பக்கத்தைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இடப்புறமுள்ள புறமொழி விக்கி இணைப்புகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, மேலும் பிற மொழி விக்கிகளில் அந்த வார்த்தை இடம் பெற்றிருக்க வேண்டுமென்ற நிச்சயமும் கிடையாது. எனவே எவ்வளவு மேலதிகத் தகவல்களை இட முடியுமோ அவ்வளவு இடுவது என்றுமே நல்லது.
"வேற்று மொழி விளக்கத்தைக் காண" நான் மொழிபெயர்ப்பை மட்டும் தான் சொல்கிறேன். விளக்கத்தை பிற மொழிகளில் இடச்சொல்லவில்லை. பிறமொழிகளில் மொழிபெயர்ப்பு/இணைச்சொல் தெரிந்தால் இங்கு இடுவது, பக்கத்துக்கு கூடுதல் மதிப்பு தான் சேர்க்கும். --Sodabottle 11:40, 13 மே 2011 (UTC)[பதிலளி]
சோடாபாட்டில், மொழிபெயர்ப்பு என்பது தமிழ்மொழிச்சொற்களுக்குப் பிறமொழிகளில் உள்ள ஈடான சொற்கள். பிறமொழி சொற்களுக்குத் தமிழ்மொழியில் மட்டுமே விளக்கம், ஈடான சொற்கள் தருதல் வேண்டும். acontecimiento என்னும் இந்த எசுப்பானிய சொல்லுக்கு ஈடான ஆங்கிலமொழிச்சொல் அல்லது ஆங்கிலத்தில் விளக்கம் வேண்டும் எனில் ஆங்கில விக்கியைப் பார்க்க வேண்டும். அதற்கான இணைப்பு இடப்புறம் உள்ள பட்டியலில் (மொழிப்பட்டியலில்) உள்ளது. எசுப்பானிய மொழிச்சொல்லுக்கு ஈடா ஆங்கில மொழிச்சொல்லையோ ஈடான சீனமொழிச்சொல்லையோ நாம் தரவேண்டியதில்லை. இந்த இசுப்பானிய மொழிச்சொல்லின் பொருள் என்ன என்று தமிழில் புரிந்துகொள்ளவே இந்த விக்கி அகரமுதலி. பிறமொழி விக்கி அகரமுதலிகளையும் அருள்கூர்ந்து பாருங்கள். ஆம், இது பன்மொழி அகரமுதலி, ஆனால் பன்மொழிகளில் தமிழ்மொழிச்சொற்களுக்கும், பன்மொழிச்சொற்களுக்குத் தமிழிலும் பொருள் தரும் அகரமுதலி. --செல்வா 13:59, 13 மே 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:acontecimiento&oldid=948521" இலிருந்து மீள்விக்கப்பட்டது