பேச்சு:antivenom

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தச் சொல்லின் பக்கத்தின் வடிவமைப்பைப் பார்த்தால். முதல் வரி (தலைப்பில்) antivenom. அடுத்து அதைவிட கொட்டை எழுத்தில் ஆங்கிலம் என்னும் சொல். அடுத்து பலுக்கல், அதற்கு அடுத்து இன்னும் ஒரு பலுக்கல், அடுத்து இன்னும் ஒரு antivenom. இதை எல்லாம் கடந்த பின் தான் சொல்லின் பொருள். இதுகூட சாய்வெழுத்தில் மருத்துவம் என்று சொல்லியபின் வருகின்றது. இதெல்லாம் பொருளைக் காண்போருக்கு உதவியாக இருக்காது. எனவே ஒரு சொல்லுக்கான வடிவமைப்பு சரியாக இல்லை என்பது என் கருத்து. சொல்லின் பலுக்கல் இருக்க வேண்டும், அது பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா என்னும் குறிப்புகளும் இருக்க வேண்டும், ஆனால் அவை நேர்த்தியாய், சிறியதாய் இருத்தல் வேண்டும். சொல்லின் பொருள் தெளிவாகவும் முதன்மையானதாகவும் இருத்தல் வேண்டும். அது தமிழில் விளக்கிச் சொல்லுதல் வேண்டும் (கூடிய மட்டிலும்). மொழிபெயர்ப்பு மட்டும் தந்தால் போதாது. ஓர் எடுத்துக்காட்டுக்காகக் கூறுகிறேன். இச்சொல்லை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லவில்லை. --செல்வா 03:13, 25 ஜூலை 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:antivenom&oldid=764051" இலிருந்து மீள்விக்கப்பட்டது