உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:assembly

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

assembly line வாகன, பொருள் தயாரிப்பு முறையை எப்படிச் சொல்வது?--ரவி 17:45, 20 ஏப்ரில் 2007 (UTC)

எங்கள் ஊரில் ஈருருளி assemble செய்வதை பூட்டுதல் என்பர். இச்சொல்லில் இருந்து ஏதேனும் பொருத்தமான சொல்லை வருவிக்கலாம்.--சிவகுமார் 07:00, 21 ஏப்ரில் 2007 (UTC)

பூட்டகம்? பூட்டு வரிசை?--ரவி 13:24, 21 ஏப்ரில் 2007 (UTC)

ASSEMBLY (MANUFACTURING PROCESS) - கட்டாக்கம்

ASSEMBLY-LINE - கட்டாக்ககம்

ASSEMBLY (STRUCTURE) - கட்டகம்

--தொழில்நுட்பம் 00:30, 10-2-08

ASSEMBLY (MANUFACTURING PROCESS) - ஒருங்கமைப்பு

ASSEMBLY-LINE - ஒருங்கமைப்பகம்

--தொழில்நுட்பம் 22:30, 7-7-08

பொருத்து வரிசை, அல்லது பொருத்திணைப்பு வரிசை எனலாம். "அகம்" என்னும் பின்னொட்டு பொருந்தாது.பூட்டு வரிசை என்பதும் பொருந்தும். பூட்டு (lock) என்பதுடன் குழம்பிக்கொள்ள வேண்டியதில்லை. கலைச்சொற்களில் இப்படி அமைவது மிகவும் பெரு வழக்கு. Assembly என்பதை சட்டமன்றம் என்றா குழம்புகிறோம். இல்லையே, அதுபோலவே தான் இதுவும். எனவே பூட்டு வரிசை என்பதனை ஆளலாம் என்பது என் பரிந்துரை. --செல்வா 17:36, 7 ஜூன் 2008 (UTC)

Start a discussion about assembly

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:assembly&oldid=181046" இலிருந்து மீள்விக்கப்பட்டது