உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:autoimmune

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

'தன்னுடல் தாங்கு திறன்' என்பதா, அல்லது 'தன்னுடல் தாக்கு திறன்' என்பதா சரியாக இருக்கும்?

Autoimmune disorder என்பதை நான் இங்கே 'தன்னுடல் எதிர்ப்பு குறைபாடு' என மொழிபெயர்த்திருந்தேன். தன் சொந்த உடலிலுள்ள உயிரணுக்கள், இழையங்களுக்கு எதிராகவே தொழிற்படக்கூடிய குறைபாடு என்பதால் அப்படிக் குறிப்பிட்டேன். மேலும் Immune system என்பதை 'நோய் எதிர்ப்பாற்றல் முறைமை' எனக் குறிப்பிட்டுள்ளோம்.

'தன்னுடல் எதிர்ப்பு குறைபாடு' என்பது சரியான முறையில் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. அது தவறானால், அதனை எப்படி குறிப்பிடலாம்? 'தன்னுடல் தாக்கு திறன் நோய்' என்று குறிப்பிடலாமா? --கலை 14:28, 14 செப்டெம்பர் 2010 (UTC)Reply

"தன்னுடல் தாங்கு திறன்" என்பது தவறான மொழிபெயர்ப்பாகும். தன்னுடல் தாக்கு திறன் என்றிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். தன்னுடலையே தாக்குவதால் இது தன்னுடல் எதிர்ப்பு என்பதைவிடப் பொருத்தமானதாகக் கருதுகிறேன். எதிர்ப்பு ஓர் வினைக்கு எதிர்வினையாக அமையும்;தாக்குதல் காரணமின்றியும் நிகழும்.
Auto immune disorder என்பதை தன்னுடல் தாக்குநோய் என்றே குறிப்பிடலாம்--Rsmn 14:30, 18 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • immune என்பது நோய்த்தடுப்பாற்றல் (தடுத்துக் காப்பது). நோயெதிர்ப்பு என்றும் கூறலாம். தன்னுடல் பிறழ் எதிர்ப்புத்தாக்கம் என்று கூறலாம் என்று நினைக்கின்றேன். அல்லது தன்னுடல் பிறழெதிர்ப்பு நோய் எனலாம். --செல்வா 03:36, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply
இங்கு கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், இதனை தன்னுடல் தாக்குதிறன் என்று மாற்றுகிறேன்.--கலை 12:37, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply
autoimmune நிலை எதன் விளைவாகவாவது இருக்கும் எனில் (எனக்கு உறுதியாகத் தெரியவில்லை) எதிர்ப்பு என்பது முற்றிலும் தவறாகாது. இருந்தாலும் தாக்கு கன்பதும் சரியாகத்தான் படுகிறது. இதைத் திறன் என்று குறிப்பிடுவதில் எனக்குத் தயக்கம் உள்ளது. தன்மை எனலாம். ஆனால் இந்த இடத்தில் இது ஒரு பெயரடையாக உள்ளதால் செல்வா குறிப்பிட்டது போல் தன்னுடல் பிறழெதிர்ப்பு அல்லது மணியன் சொன்னதில் இருந்து தன்னுடல் தாக்கு எனலாம். எடுத்துக்காட்டாக ஒரு வாக்கியமும் தரலாம். autoimmune disorder எனும்போது நோய் என்ற பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன். -- Sundar 13:48, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

விக்கிப்பீடியாவில் உரையாடியதன்படி, நான் இங்கே Autoimmune என்பதை 'தன்னுடல் தாக்குமை' என மாற்றுகிறேன்.--கலை 14:33, 24 செப்டெம்பர் 2010 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:autoimmune&oldid=796153" இலிருந்து மீள்விக்கப்பட்டது