பேச்சு:cooker
தலைப்பைச் சேர்pressure cooker, electric cooker, rice cooker என்று பல பெயர்களில், வகைகளில் cooker உள்ளது. ஆக, இதை மின் அடுப்பு என்று சொல்வதோ அடுப்பு என்று சொல்வதோ இரண்டுமே பொருத்தமற்றது. சமைக்கும் பாத்திரம் என்பது போல் சொல்லலாமா? இல்லை, ஒற்றைத் தமிழ்ச் சொல் ஏதேனும் புழக்கத்தில் உள்ளதா?--ரவி 11:21, 12 செப்டெம்பர் 2006 (UTC)
- நீங்கள் சொல்வது சரி போலத்தான் தெரிகிறது...உமா 5:55, 10 செப்டெம்பர் 2006 (UTC)
- சமைக்கும் பாத்திரம் என்பது மிகவும் பொதுவாக உள்ளது. அல்லது அவிப்பான் என்பது சமையலில் அதன் உட்பகுப்பான வேகவைத்தலை விளக்கும் வகையில் அமைகிறதா? -- Sundar 12:24, 12 செப்டெம்பர் 2006 (UTC)
சுந்தர், (இன்று யோசித்துப் பார்த்தால் ;)) சமைக்கும் பாத்திரம் என்பது கூட அவ்வளவு துல்லியமாகத் தெரியவில்லை. பாத்திரம் என்றாலே உணவை கொள்வது, சமைப்பது ஆகியவை தானே முதன்மைப் பணிகள்? எல்லா பாத்திரத்திலும் சமைக்கலாம், அவிக்கலாமே??--ரவி 07:47, 13 செப்டெம்பர் 2006 (UTC)
cook - cooker எனபது போல் சமை - சமைப்பான் என்று கொண்டால் பொருத்தமாக வரும் என்று நம்புகிறேன். electric cooker - மின் சமைப்பான், pressure cooker - அழுத்தச் சமைப்பான், rice cooker - சோறு சமைப்பான், vegetable cooker - (காய்)கறி சமைப்பான், milk cooker - பால் சமைப்பான். --ரவி 09:42, 13 செப்டெம்பர் 2006 (UTC)
குக்கர் என்ற ஒலிபெயர்ப்பை தமிழ் சொல்லாக ஏற்றுக் கொண்டால் என்ன? குக்கர் தமிழ் சொல் போலத் தான் ஒலிக்கிறது. வழக்குத் தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சொல். மின் குக்கர், சாதக் குக்கர், பால் குக்கர் என்னலாம். --Omanickam 15:32, 16 செப்டெம்பர் 2006 (UTC)
- cook, cooker ஆகியவை மிக எளிய காரணப் பெயர்கள். அவற்றை அப்படியே ஒலிபெயர்ப்பதற்கான தேவையோ மொழிபெயர்ப்பதற்கான சிக்கலோ இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை :(- cook, சமையல்காரனாக இருக்கும்போது cooker மட்டும் ஏன் குக்கராக இருக்க வேண்டும்?ஏற்கனவே இருந்த மின் அடுப்பு என்ற விளக்கத்தை விட சமைப்பான் என்ற சொல் பரவாயில்லை என்பதால் கட்டுரைப் பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். உரையாடல்களைத் தொடர்ந்து தேவைக்கேற்ற மாற்றங்களை செய்யலாம்.-ரவி 16:21, 16 செப்டெம்பர் 2006 (UTC)