உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:cornea

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

cornea அல்லது sclera இவற்றுள் எது விழிவெண்படலம்[தொகு]

  • cornea அல்லது sclera இவற்றுள் எது விழிவெண்படலம் என்பது தீர்மானிக்க உதவுமாறு வேண்டுகிறேன், இவற்றுள் sclera என்பது விழிவெண்படலம் என்று அழைக்கப்பொருத்தமானது, ஏனெனில் அதன் நிறம் வெண்மை. sclera என்பதனை விழிவெளிப்படலம் என்றும் அழைக்கலாம், ஆனால் cornea என்பது கண்ணில் கருமையாகத் தெரியும் பகுதி, அதாவது கருவிழித்திரையையும் (iris) கண் வில்லையையும் மூடியிருக்கும் ஒரு ஒளிபுகுப் படலம், எனவே இதனை கருவிழிப்படலம் என்று அழைப்பதே பொருத்தம் ஆகும். விக்சனரியில் உள்ள cornea எனும் பகுதியைக் கொண்டுள்ள சொற்களைப் பார்த்தோமானால் அவை யாவும் கருவிழி என்ற பொருளை மையமாக வைத்தே கூறப்பட்டுள்ளது.

பெரும்பான்மையானவர் corneaவை விழிவெண்படலம் என்று அழைத்து, corneal transplant (corneal grafting) என்பதை விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை என்பர், இது வழமையில் இருந்து வரும் சொல்லாயினும் பொருத்தமானதல்ல என்பதனை நோக்க வேண்டும். உங்கள் கருத்துக்கள் என்ன? --சி. செந்தி 11:00, 15 அக்டோபர் 2010 (UTC)Reply

  • செந்தி நீங்கள் சொல்வது சரி. sclera என்பது கெட்டியான விழிமணியின் வெள்ளுரை. cornea என்பது கருவிழியை மூடியிருக்கும் ஒளியூடுருவும் படலம். pupil என்பது திறப்பு ஆகிய பாவை, iris என்பது கருவிழி. கண்மணி (கருமணி) என்பது இந்த iris என்பதுதான் என்று நினைக்கின்றேன். கண்ணின் கருமணி என்பது (கண்மணி) கருவிழி; அது பாவைத் திறப்பைக் கட்டுப்படுத்தும். ஒளியூடுருவும் பொருள் என்பதை ஒளிக்கடவை எனலாம் (கடவை = கடக்கை, கடத்தை)(ஒளிக்கடவி = transparent = ஒளியூடுருவி). கருவிழியின் ஒளிக்கடவைப் படலம் கார்னியா. தமிழில் கார் என்றால் கறுப்பு. ஆகவே கருவிழியை மூடியுள்ள படலம் என்பதால் கருவிழிப்படலம் அல்லது கார்ப்படலம் எனலாம். எளிய கருவிழிப்படலம் என்பதே போதும் என்று நினைக்கிறேன். sclera என்பதை வெண்விழிப்படலம் எனலாம். --செல்வா 21:08, 15 அக்டோபர் 2010 (UTC)Reply

கண்மணி, கதிராளி[தொகு]

  • கண்மணி, கருமணி என்பது வில்லையைக் குறிப்பதாக இருக்கலாம். கருவிழியின் ஒரு பகுதியாக இருக்கலாம். மிக அருமையாக உள்ளுறுப்புப்பகுதிக்களைத் தமிழில் வடித்திருக்கின்றீர்கள், செந்தி --செல்வா 16:03, 17 அக்டோபர் 2010 (UTC)Reply
  • நன்றி செல்வா, iris என்பது நிழற்படக் கருவியின் பிரிபடலம் போன்றே வேலை செய்வதொன்று, irisயை கதிராளி என்று சிறுவகுப்பில் படித்த ஞாபகம், இதனுடைய நடுத் துவாரப்பகுதியே pupil கண்மணி எனப்படுகிறது, நீங்கள் முன்னர் கூறியது ((""கண்மணி (கருமணி) என்பது இந்த iris என்பதுதான் என்று நினைக்கின்றேன்."" ))ஓரளவுக்குப் பொருந்துகிறது. http://en.wikipedia.org/wiki/Iris_of_the_eye http://en.wikipedia.org/wiki/Diaphragm_%28optics%29

விழிவெண்படலம்[தொகு]

sclera உடைய தொடர்ச்சியே cornea ஆகும், எனினும் அது irisஐ மூடி இருப்பதால் கருமையாகத் தோற்றமளிப்பதுடன் ஒளியூடுருவியாக விளங்குகிறது(sclera ஒளிபுகாத படலம் ஆகும் ) , எனவே sclera என்பதை நீங்கள் கூறியது போல வெண்விழிப்படலம் என்றும், cornea வை கருவிழிப்படலம் என்றும் அழைத்தல் சிறப்பானதாக அமைகிறது.

தொகுப்பு[தொகு]

கண்ணில் முதலில் பக்கமாக வெள்ளையாகத் தெரிவது வெண்விழிப்படலம்; நடுவில் உள்ளது, ஆனால் காணமுடியாதது (ஒளியூடுருவி என்பதால்) கருவிழிப்படலம். கருவிழிப்படலத்தின் பின்னால் உள்ளது கதிராளி, கதிராளியின் மையத்தில் வட்ட வடிவமான சுருங்கி விரியக்கூடிய துவாரம் உள்ளது, இதுவே கண்மணி எனப்படும். கண்மணியின், கதிராளியின் பின்னே காணப்படுவது வில்லை ஆகும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:cornea&oldid=802664" இலிருந்து மீள்விக்கப்பட்டது