பேச்சு:health
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
health = சுகாதாரம் என்று சொல்லும் வழக்கு பொதுவாக அரசில், பத்திரிகைகளில் இருக்கிறது. ஆனால், இது சரியா?சுகாதாரம் = sanitation என்பது போல் தான் எனக்குத் தோன்றுகிறது??--ரவி 20:53, 6 டிசம்பர் 2006 (UTC) சுகாதாரம் என்பது "the basis of wellness" என்று பொருள் தரும் வடமொழி. "நலம்", "உடல்நலம்" என்பன நல்ல தமிழ் சொற்கள். -- Sundar 08:41, 12 டிசம்பர் 2006 (UTC)
ஆம் சுகாதாரம் என்பது வடமொழிச்சொல். அதன் நேர் தமிழ்ச்சொல் நலம் தான். அருநாடன்2 08:19, 9 அக்டோபர் 2010 (UTC)
- சுக ஆதாரம், சுகாதாரம். நலமாய் வாழ அடிப்படையாக இருத்தல் என்பது பொருள். இது சமசுக்கிருத அடிப்படையான சொல். நல்ல சொல்லே, ஆனால் மேலே இரவி கூறியது போல sanitation என்பதோடு, hygiene என்பதாகப்பொருள்தரும். தூய்நலம் என்றாலும் பொருந்தும். health என்பது நலம்தான். ஆனால் உடல்-உள நலம் (உடல்நலம், உளநலம்) என பிரித்தோ சேர்த்தோ கூறுவது பொருந்தும் என நினைக்கிறேன். நலம் என்று சுருக்கமாகக் கூறி தக்க பொருள் ஏறுமானால் அதுவும் நல்லது. நலத்துறை (Health Department) என்பது நல்ல சொல். Public Health Dept என்பதை பொதுநலத்துறை என்பதும் சரியே.--செல்வா 15:11, 9 அக்டோபர் 2010 (UTC)