உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:hijack

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

பயண வழியில் வழிமறித்து களவாடி துன்பம் தருபவர்களுக்கு ஆறலைக் கள்வர் என்று பெயர். ஆறலை என்றாலே வழிபறிக் கொள்ளை. எனவே ஆறலை என்பதை அடிப்படையாக கொண்டு இடத்திற்கு ஏற்றார்போல சொற்கள் ஆக்கலாம். ஆறு என்றால் வழி என்று பொருள்--செல்வா 23:32, 21 மார்ச் 2008 (UTC)Reply

செல்வழிக் கடத்தலில் கொள்ளையும் இருக்கலாம். ஆனால், எல்லா செல்வழிக் கடத்தல்களிலும் கொள்ளை அடிப்பதில்லையே? அதனால் hijack என்பதற்கு ஆறலை பொருந்தி வருமா?--ரவி 11:26, 23 மார்ச் 2008 (UTC)Reply
ரவி, ஆறலை என்பது ஆறு (= வழி) + அலை (= அலைக்கழித்தல், அல்லல் தருதல், அலைவித்தல்) => ஆறலை என்று ஆகியது. ஆனால் பெரும்பாலும் வழிமறித்துக்கொள்ளை அடிப்பதால் ஆறலை என்றாலே வழிமறித்துக் கொள்ளை அடித்தல் ஏனும் பொருளும் பெற்றுள்ளது. ஆறலை = வழியில் அல்லல் தருதல் என்பதை அடிப்படையாகக்கொண்டு ஒரு சொல் ஆக்கலாம் என்றேன். எடுத்துக்காட்டாக ஆறலைக் கடத்தல் என்றும் கூறலாம். செல்வழிக் கடத்தல் என்பதைக் காட்டிலும் வழிக்கடத்தல் என்னும் வழக்கில் உள்ள சொல்லையே எளிமையாக ஆளலாமே. இவை என்னுடைய தனிப்பட்ட சில கருத்துக்கள்தாம். ஆறலை என்னும் சொல்லை நினைவு படுத்தவே எழுதினேன் :) --செல்வா 16:08, 23 மார்ச் 2008 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:hijack&oldid=170376" இலிருந்து மீள்விக்கப்பட்டது