உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:pop corn

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விக்சனரிக்குழுமத் தொடுப்பு --02:06, 8 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பொரி / பொறி

[தொகு]

"மக்காச்சோளப் பொறி" என தமிழாக்கப்பட்டதில் "பொறி" எனப்படுவதை "பொரி" எனத் திருத்த வேண்டும் எனக் கருதுகிறேன். "மக்காச்சோளம்" கூட சுருக்கமாக்கி "சோளப்பொரி" எனலாம்.

பொரித்து வருவதால் பொரிதான் சரியான எழுத்துக்கூட்டல் என எண்ணுவதற்கு சான்றுகள்:

1) http://ta.wiktionary.org/wiki/பொரி இதுவும் விக்சனரி தான். அங்கு "பொரி" இன் பொருள் தெளிவாகும். மேலும் சோளப்பொரி எனக் காட்டப்பட்டுள்ளது இந்த Pop Corn தான்.

2) சோளப்பொரி பற்றிய தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை : http://tawp.in/r/28mm

3) பொரி எனும் சொல் எழுந்த ஓசைக்குறிப்பு பற்றி திரு இராம.கி. அவர்களின் விளக்கம் : http://valavu.blogspot.com/2008_04_01_archive.html :

 //பொரு என்னும் சொல் புர்.....என்னும் உராய்வு ஓசையை வைத்து எழுந்த சொல். பொரி என்ற சொல்லும் இந்த புர்...... என்னும்    ஓசைக்குறிப்பில் எழுந்தது தான்.//

பொரியை பொறி எனவும் பொரியலை பொறியல் எனவும் எழுதுவது ரகர றகர வேறுபாடுகளில் தெளிவற்று போனதால்தான் ஏற்பட்டிருக்கலாம். எனவே தலைப்பில் பொரி எனத் திருத்தி விளக்கத்தில் பொறி எனும் எழுதும் வழக்கு உள்ளதையும் சுட்டிக்காட்டலாம்.

கா. சேது 08:33, 8 செப்டெம்பர் 2011 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:pop_corn&oldid=1001970" இலிருந்து மீள்விக்கப்பட்டது