பேச்சு:pulmonary

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

புப்புசம் என்பது சமசுக்கிருதச் சொல், இங்கு அது தேவையா? விக்சனரியில் உள்ள அனைத்து "pulmonary" தொடர்பான சொற்களில் 'புப்புச' எனும் சொல் உள்ளது, இதனை நுரையீரல் என்றோ சுவாசப்பை என்றோ மாற்றவேண்டும், இந்தக்கருத்தை ஆமோதித்தால் நான் நீக்கி, உரிய சொல்லை இட்டுவிடுகிறேன்.

இங்கே பார்க்கவும் : சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட கலைச் சொற்கள்
--சி. செந்தி 07:06, 11 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
நீக்கிவிட்டேன். சுவாசப்பை என்பதை மூச்சுப்பை என்றும் திருத்தியுள்ளேன்.--செல்வா 21:59, 11 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
மிக அருமையான சுட்டு தந்திருக்க்கின்றீர்கள் செந்தி! மறைமலை அடிகளும், தேவநேயப்பாவாணரும், பூர்ணலிங்கனாரும், பரிதிமாற்கலைஞரும், பெருஞ்சித்திரனாரும் இன்னும் பற்பலரும் இல்லை எனில் இன்று தமிழ் இருந்திருக்குமா என்பது ஐயமே!! தமிழ் என்ற பெயரில் கிரியோல் போல் ஒரு மொழி இருந்திருக்கும். இன்றும் ஊடகத் துணையுடன் பலரும் கிரியோல் ஆக்க மிகவும் முனைகிறார்கள்தாம். அரசுகள், தமிழறிஞர்கள், தொழிற்கலைஞர்கள் விழிப்பாய் இருக்க வேண்டும். இன்று அழிந்த, அழிந்து வரும் பொருட் துல்லியம் நிறைந்த சொற்கள் மிகப்பல!! --செல்வா 22:07, 11 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:pulmonary&oldid=799394" இலிருந்து மீள்விக்கப்பட்டது