உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:reflux

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கருத்துப் பிழை

[தொகு]
  1. தணிவு
  2. எதிர்த்தாக்கம்
  3. எதிர் விளைவு
  4. எதிர் வினை

குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு கருத்தும் reflux எனும் சொல்லுடன் பொருந்தவில்லை எனக் கருதுகிறேன். http://en.wiktionary.org/wiki/reflux

எந்தவொரு நீர்மத்தினதும் (அல்லது GERD நோயில் உணவின்; இதய அடைப்பிதழ் நோயில் குருதியின் ) பின்னோக்கிய முறையற்ற ஓட்டமே reflux எனப்படுகிறது.

இதன்படி இதனை பின்னோட்டம், பின்னொழுக்கு என அழைக்கலாம். Gastroesophageal reflux disease (GERD) எனப்படும் நோயினை இரையக உண்குழலிய எதிர்வினை நோய் என தமிழ் விக்கியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது reflex எனும் கருத்திலேயே கையாளப்பட்டுள்ளது, உண்மையில் இரையக உண்குழலிய பின்னோட்ட நோய் என அழைக்கலாம், எனவே யாவருக்கும் மறுப்பு இல்லையெனின் உகந்த கருத்தாக பின்னோட்டம், பின்னொழுக்கு என மாற்றியமைக்க பரிந்துரைக்கின்றேன்.--சி. செந்தி 20:59, 19 டிசம்பர் 2010 (UTC)

நன்றாக துப்பு கண்டுபிடித்துள்ளீர்கள் செந்தில். கட்டாயம் மாற்றிவிடுங்கள். பின்னோட்டம், பின்னொழுக்கு என்பன அருமையான எளிய சொற்கள். மேலும் சொற்கள் வேண்டும் எனில்,எதிரோட்டம், எதிரொழுக்கு என்றும் சொல்லலாம். பொதுவாக flux என்றால் ஓட்டம், செலுத்தம், ஒழுக்கு. --செல்வா 22:38, 19 டிசம்பர் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:reflux&oldid=904517" இலிருந்து மீள்விக்கப்பட்டது