உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:smooth

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

smooth என்பதற்கு வழவழப்பான என்பது சரியா அல்லது வழுவழுப்பான என்பது சரியா? இல்லை இரண்டுமே சரி என்று எடுக்கலாமா? --சி. செந்தி 11:39, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

இரண்டுமே சரிதான், மழுமழு, மழமழ என்பனவும் ஈடானவையே. ஆனால் இவை ஒவ்வொன்றும் சூழலுக்கு ஏற்றவாறு சிறுசிறு பொருள்நிறம் மாறுபாட்டைக் காட்ட்டவல்லது. வழவழ என்பது சில இடங்களில் slimy என்பது போன்ற பொருளும் தரவல்லது. வெண்டைக்காய் குழம்பில் வழவழ என்று காய் தட்டுப்பட்டது, அங்கே பய்ன்படும் வழவழப்பு slimy என்னும் பொருள். ஆனால் மழுமழு, மழமழ என்பன இப்பொருள்கள் தரா. வழுவழுப்பான தரை, வழவழப்பான தரை என்றால் smooth என்னும் பொருள்தான். எனினும், தமிழ்ச்சொற்கள் தரும் பொருள்நிறம், உணர்வு smooth என்னும் சொல் தருவதில்லை. இதனை இரு மொழியையும் (தமிழ்-ஆங்கிலம்) அறிந்த பலரிடமும் இங்கு கனடாவில் கேட்டிருக்கின்றேன். அவர்களும், ஆம், தமிழ்ப்பொருள் தரும் உணர்வு ஆங்கிலச்சொல் தர வில்லை என்கின்றார்கள். வேறு சூழல்களில் ஆங்கிலச்சொல் தரும் உணர்வு தமிழ்ச்சொல் தருவதில்லை. --செல்வா 16:52, 22 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி, நானும் அதனை ஆமோதிக்கின்றேன், எலும்பில் உள்ள smooth surface என்பதனை வழவழப்பான மேற்பரப்பு என மொழி பெயர்த்துள்ளேன்.--சி. செந்தி 18:19, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

Start a discussion about smooth

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:smooth&oldid=779978" இலிருந்து மீள்விக்கப்பட்டது