மகாகௌரி தேவி
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு) |
மகாகௌரி தேவி, .
பொருள்
[தொகு]- இறைவி துர்கையின் ஒன்பது அம்சங்களில் (நவதுர்கா) ஓர் அம்சம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- one of nine features of goddess durga--mahagowri
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்....வடமொழி...महागौरी देवी....மஹாகௌ3-ரி தே3-வி...மகாகௌரி தேவி....இறைவி துர்காதேவி வழிபாட்டில் தலைசிறந்தவர்களான வங்கநாட்டு/வட இந்திய மக்கள் ஒன்பது அம்சங்களில் துர்காதேவியை மிகச்சிறப்பாக வழிபடுகிறார்கள்...அவைகளில் ஓர் அம்சம் மகாகௌரி தேவி என்பதாகும்...ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி துர்கை பூசை விழாவில் எட்டாவது நாள் இரவு பூசிக்கப்படும் இறைவியின் திருவுருவம் இதுவேயாகும்...
- மகாகௌரி தேவி நான்கு திருக்கரங்கள் கொண்டவள். காளை வாகனத்தில் அமர்ந்தவளாய், வலது இரு கரங்களில் அபய முத்திரை, சூலம், மற்றும் இடது இரு கரங்களில் வரத முத்திரை, டமரு என்னும் உடுக்கை வைத்துக்கொண்டு காட்சி தருகிறாள்... இந்த தேவி சாந்த முகத்துடன் காட்சி தருவாள். இவளை வழிபட பசிப்பிணி நீங்கும், மனதில் அமைதி நிலவும்...
- மற்ற எட்டு அம்சங்களின் பெயர்கள் பிரம்மசாரிணி, சந்திரகன்டா, காளராத்திரி, காத்யாயனி, குஸ்மந்தா , சைலபுத்திரி, சித்திதாத்திரி, ஸ்கந்தமாதா ஆகியவைகளாகும்.