மக்கா
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மக்கா, பெயர்ச்சொல்.
- காண்க: மக்கம்
- கன்னியாகுமரி மாவட்ட வட்டார வழக்கில் புழங்கும் ஒரு விளிச்சொல்
- அப்பாவிடம் கேட்டேன், ”வயலில் உதிர்ந்துபோகும் நெல் அனைத்தும் நமக்கு நட்டம்தானே!”அப்பா சொன்னார், ”அப்படி இல்லலே மக்கா! இந்த மண்ணு நமக்குச் சொந்தமில்லே. இந்த வெயிலு, காத்து, மழை எதுக்கும் நாம துட்டு தாறதில்லே. இந்த உலகத்திலே நம்மளைப்போல காக்கா, குருவி, தவளை, நண்டு, நத்தை, விட்டிலு, தட்டான், பூச்சிகள்னு நெறைய சீவிச்சிருக்கு. இந்த வெளைச்சல்லே அதுகளுக்கும் பங்கு குடுக்கணும். நாம பாடுபட்டதுக்கு உண்டானதை நாம எடுத்துக்கிடலாம். அதுக்கு மேல ஆசைப்படக் கூடாது, கேட்டியா?” ('விவசாயி' சிறுகதையில் நாஞ்சில்நாடன்).
- வெயிலாள் வெள்ளத்திற்கு வெளியில் நின்று "முத்து...இங்க வந்துருல மக்கா" என்று உரக்க கூவிக் கொண்டிருந்தாள் ('அய்யா வைகுண்டர் இதிகாசம்' என்ற தொடரில் லக்ஷ்மி மணிவண்ணன்).
- மக்காத (மட்காத) என்பதன் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- மக்காக் குப்பை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +