மடிசார்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மடிசார், .
பொருள்
[தொகு]- ஒரு புடவை கட்டும் பாணி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a method in which sari is worn by married women of the tamil brahmin community.
விளக்கம்
[தொகு]- தமிழ்நாட்டு அந்தணர்களில் திருமணமானப் பெண்கள் புடவை அணியும் பாணி மடிசார் எனப்படும்...பழைய பழக்கங்களின்படி திருமணமானதும் பிராமணப் பெண்கள் தினமும் இந்தப் பாணியில்தான் புடவை அணியவேண்டும்...சமையலும் குளித்துவிட்டு மடியாக, சுத்தமாக இந்தப்பாணி புடவைக் கட்டிக்கொண்டுதான் செய்யவேண்டும்...மடியை சார்ந்த பாணி என்பதால் மடிசார் கட்டு என்பர்...இந்த பாணியில் இருவகை உண்டு...வைணவ மதத்தினர் (ஐயங்கார்) புடவையின் மேல் தலைப்பை இடது பக்கமாகவும், சைவ மதத்தினர் (ஐயர்) வலது பக்கமாகவும் மடித்து அணிவர்...மடிசார் கட்டுவதற்குப் புடவையின் நீளம் அதிகமாகத் தேவைப்படுமென்பதால் ஒன்பது கெஜம் நீளமுள்ளப் புடவையே கன கச்சிதமான மடிசார் கட்டுக்குப் பயன்படுகிறது...தற்காலத்தில் தினமும் மடிசார் கட்டுவதில்லை...விசேட காலங்களில்தான் கட்டுகின்றனர்...சம்பிரதாயமானது அல்ல என்றாலும் சற்று எளிதான முறையில் ஆறு கெஜம் நீள புடவையிலும் மடிசார் கட்டும் முறை தற்போது நடைமுறையிலுள்ளது...முறையான மடிசார் பாணியில் கட்டியப் புடவை எந்தச் சூழ்நிலையிலும் பெண்களின் உடலிலிருந்து நழுவாது,வழுவாது, அவிழாது, பறக்காது என்பதே சிறப்பாகும்...பட்டு, பருத்தி முதலான எல்லாவிதமான துணிகளிலும் மடிசார் புடவைகள் ஆயத்தமாகக் கிடைக்கின்றன...
பயன்பாடு
[தொகு]- அடியே கீதா, மற்றைய நாட்களில் நீ எப்படியாவது புடவை கட்டிக்கொள்..ஆனால் இன்று வருஷப்பிறப்பு..பண்டிகை நாட்களிலாவது, வீட்டிலிருக்கும்போது, கொஞ்சம் மடிசார் கட்டிக்கொண்டு வா...பூஜையில் மடிசார் கட்டிக்கொண்டால்தான் நன்றாக இருக்கும்...