உள்ளடக்கத்துக்குச் செல்

மண்ணுமங்கலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மண்ணுமங்கலம், பெயர்ச்சொல்.
  1. அரசன் முடிபுனைந்த காலந் தொடங்கி யாண்டுதோறும் முடிபுனைந்து நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை
    (எ. கா.) சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும் (தொல். பொ. 91)
  2. மாற்றரசனது மதிலையழித்த அரசன் மங்கலமாக நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. மன்னெயிலழித்த மண்ணுமங்கலமும் (தொல். பொ. 91)
  3. பட்டவேந்தனான பகைவன் பெயரானே அவன்முடி புனைந்து வென்ற வேந்தன் நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. குடுமிகொண்ட மண்ணுமங்கலமும் (தொல். பொ. 68)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. 1 (Purap.) Theme describing the ceremonial bath of king on the day of his coronation and on the successive anniversaries of that day
  2. (Paṟap.) Theme describing the purificatory bath of a victorious king on the destruction of a hostile fortress
  3. (Puṟap.) Theme describing the ceremonial bath of a conqueror, when he assumes the crown, name and title of his vanquished enemy



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்ணுமங்கலம்&oldid=1416364" இலிருந்து மீள்விக்கப்பட்டது