மருளூமத்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மருளூமத்தை:
செடி இலைகள்
மருளூமத்தை:
காய்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மருளூமத்தை, பெயர்ச்சொல்.
  • (மருள்+ஊமத்தை)

(Xanthium Strumarium...(தாவரவியல் பெயர்))

  1. ஊமத்தை வகை (பதார்த்த. 273.)
  2. பேயூமத்தை
  3. ஆடையொட்டி

விளக்கம்[தொகு]

  • மருளூமத்தை மருத்துவக் குணமுள்ள ஒரு தாவரம்...அசப்பில் ஊமத்தையைப்போலவே இருக்கும்...அமெரிக்காவிலும் கிழக்கு ஆசியாவிலும் வளரும் நிலைத்திணை (தாவரம்)...இதன் விதைகள் விலங்குகளின் உடல் மயிர்/மனிதர்களின் ஆடைகளில் ஒட்டிக்கொள்வதால் பல இடங்களுக்குப் பரவி வளர்கிறது...ஆகவே ஆடையொட்டி என்னும் காரணப் பெயருமுண்டு... .

மருத்துவ குணங்கள்[தொகு]

  • மருளூமத்தைக்கு குளிர்சுரம், உடம்பிலுண்டான நீர்க்கோவை, அற்பவீரிய விடம், அக்கினி மந்தம், வாதக் குற்றம் ஆகியவை விலகும்...

பயன்படுத்தும் முறை[தொகு]

  • இதன் வித்தை செம்மண் நீரில் ஒரு நாள் ஊறவைத்து, பிறகு எலுமிச்சம் பழச்சாற்றில் ஒரு நாள் ஊறப்போட்டு உலர்த்தி எடுத்தால் உபயோகப்படுத்தும்படியான சுத்தியடையும்...இதைத் தாது விருத்திக்குரிய இலேகியங்களில் சேர்ப்பர்...சிறிய அளவில் உட்கொள்ளத் தீபாக்கினியை உண்டாக்கி, உற்சாகத்தைக் கொடுத்து, இந்திரிய ஸ்தம்பனத்தை உண்டாக்கும்...இதை உட்கொள்ளும் அளவு மிகுந்தால் சோர்வடைதல், பிதற்றல், புறளல், பிரமை ஆகிய தீயக்குணங்களை விளைவிக்கும் .

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. burdock datura


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருளூமத்தை&oldid=1340369" இலிருந்து மீள்விக்கப்பட்டது