உள்ளடக்கத்துக்குச் செல்

மழநாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மழநாடு, பெயர்ச்சொல்.
  1. திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி. முதல் பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூரு) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு. கி மு முதல் கி பி வரை மழநாட்டின் வரலாறு நீள்கிறது. சங்ககால புலவர் அவ்வையாரால் பாடப்பட்ட அதியமான்கள், வல்வில் ஓரி, கொல்லி மழவன், அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை 17 ம் நூற்றாணதில் ஆண்ட ஒப்பில்லா மழவராயர் போன்றோர் மழநாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தனர். தமிழ் தாத்தா ஊ வே சாமிநாதய்யரின் முன்னோர்கள் இந்த அரியலூர் மழவராயர்களால் போற்றப்பட்டனர். தமிழ் நாட்டின், தஞ்சாவூர் பகுதியில் 17 ஆம் நூற்றாண்டில் புனல்வாசல் பகுதியின் பாளையக்காரர்களாக அப்புசாமி மழவராய பண்டாரத்தார் இருந்தனர்.
  1. (எ. கா.) மங்கல மென்பதோர் ஊருண்டு போலும் மழநாட்டுள் (தொல். சொல். 273, இளம்பூ.)
  2. ந.மு.வேங்கடசாமி நாட்டார் (1923). கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. பக். 91.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Region north of the Cauvery on the western side of Trichinopoly. The ancient Mazhanadu lies between modern Bengaluru and Northern parts of Trichy. It includes the districts of Namakkal, Salem, Darumapuri, Krishnagiri, Ariyaloor and parts of Karur and Trichy.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மழநாடு&oldid=1895077" இலிருந்து மீள்விக்கப்பட்டது