உள்ளடக்கத்துக்குச் செல்

மாவலிக்கிழங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மாவலிக்கிழங்குச் செடி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மாவலிக்கிழங்கு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

ஓர் உணவுக்கிழங்கு.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of indian root vegetable alike sarsaparilla

விளக்கம்[தொகு]

  • மாகாளிக்கிழங்கு என்றும் அழைப்பர். நன்னாரியைப் போலிருக்கும்...நாட்டில் விளைந்தால் நன்னாரி, மலையில் விளைந்தால் மாகாளி என்பது பேச்சு வழக்கு... மருத்துவத்தில் உட்சூடு, பித்தம்,அரோசகம் சிலேட்டுமம்,வாதக்குற்றம் ஆகிய நோய்களைக் குணப்படுத்தும்... குளிர்ப் பானங்கள் தயாரிக்க இதன் சாறு பயன்படும்.
  • உணவாக: இவை வித்தியாசமான மணமும், சுவையும் கொண்டிருக்கும்... பிடித்தவர்களுக்குச் சுகமான அனுபவம்... இந்தக்கிழங்கை சுத்தமாக, மண்ணில்லாமல் கழுவி மேற்தோல்சீவிச் சிறுதுண்டுகளாக வெட்டி புளித்த ஒரே சீரான திடமுள்ள தயிரில் போட்டு, உப்பிட்டு, நன்றாக ஊறியதும் மோர் அல்லது தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகப்பிரமாதமாக இருக்கும்...சிலர் எலுமிச்சைபழச் சாற்றிலும் உப்பிட்டு ஊறவைத்துப் பயன்படுத்துவர்.


( மொழிகள் )

சான்றுகள் ---மாவலிக்கிழங்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாவலிக்கிழங்கு&oldid=1220991" இலிருந்து மீள்விக்கப்பட்டது