உள்ளடக்கத்துக்குச் செல்

மிகுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
 • மிகுதல், பெயர்ச்சொல்.
 1. அதிகமாதல்
  (எ. கா.) முந்திரிமேற் காணி மிகுவதேல் (நாலடி.346)
 2. பெருகுதல்
  (எ. கா.) காப்புமிகின் (இறை. 16)
 3. பொங்குதல் (பிங். )
 4. எழுத்து இரட்டித்தல்
  (எ. கா.) மெல்லெழுத்து மிகினும் (தொல். எழுத். 341)
 5. நெருங்குதல்
  (எ. கா.) தலைத்தலை மிகூஉம் (பரிபா. 16, 14)
 6. சிறத்தல்
  (எ. கா.) அதன்க ணின்று மீடல் மிக்கது (இறை. 3, பக். 44)
 7. ஒன்றின் மேம்படுதல்
 8. எஞ்சுதல்(பேச்சு வழக்கு)
 9. செருக்குறுதல்
  (எ. கா.) மிகுதியான் (குறள். 158)
 10. தீமையாதல்
  (எ. கா.) மிக்கவை (குறள். 158)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
 • ஆங்கிலம்
 1. To exceed, surpass; to be in excess
 2. To grow, increase
 3. To swell
 4. (இலக்கணம்) To be doubled, as a letter
 5. To crowd
 6. To be great; to be excellent
 7. To be superior
 8. [T. migulu.] To remain; to be left over; to be superfluous
 9. To be self-conceited, arrogant
 10. To be evil( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிகுதல்&oldid=1265686" இலிருந்து மீள்விக்கப்பட்டது