முக்காடு போடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முக்காடு போடல்

சொல் பொருள் விளக்கம்

முக்காடுபோடுதல் சமயக் கோட்பாடாகக் கொண்டார் உளர். கைம்மைக் குறியாகக் கொண்டாரும் உளர். அவரை விலக்கிய முக்காடு இது. இந்நாளில் முக்காட்டு வழக்கெனக் காவல் துறையார் காட்டும் முக்காட்டினும் இம்முக்காடு வேறுபட்டது. “உன்னைப் பெற்றதற்கு முக்காடு போட வைத்து விட்டாய்” என்பதில் முகங்காட்ட முடியாத இழிவுக்கு ஆட்படுத்திவிட்டாய் என்னும் குறை மானக் கொடுமைக் குறிப்பு உண்மை அறிக. இழிவுக்கு ஆட்பட்டு அதனை உணரும் மானமுடையார் தம் முகம் காட்ட நாணி முக்காடு போடல் காணக் கூடியதே. நான்குபேர் முன் தலைகாட்ட நாணி, தலைமறைந்து செல்லலும் காணக் கூடியதே. ஆதலின் முக்காடு இழிவுக் குறியாக இவ்வழியில் இயல்கின்றதாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=முக்காடு_போடல்&oldid=1912997" இலிருந்து மீள்விக்கப்பட்டது