உள்ளடக்கத்துக்குச் செல்

முன்கைப்பிள்ளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முன்கைப்பிள்ளையும் மூங்கைப்பிள்ளையும்' முன்கை என்பது முழங்கைக்கு கீழே உள்ள கை

  அதில் தாங்கி வைக்கப்படும் குழந்தையே முன்கைப்பிள்ளை எனப்படும்.
   மேரிமாதாவின் கையில் உள்ள குழந்தை ஏசு கூட மாதாவின் முன்கையில்தான் உள்ளார்.

இறையனார் களவியல்

  இறையனார் களவியல் நூலின் உரைப்பாயிரத்தில் 'உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திரசன்மன் பைங்கண்ணன் புன்மயிரான் ஐயாட்டைப்பிராயத்தான் மூங்கைப்பிள்ளை' என உள்ளது. இதில் இடம்பெற்ற மூங்கைப்பிள்ளை என்பது சரியான சொல்லா? வேறு ஏதாவது தொல்தமிழ்ப் பாடல்களில் இச்சொல் இடம்பெற்றுள்ளதா? இல்லையென்றே தெரிகிறது. ஆய்வுசெய்யவேண்டும். முன்கைப் பிள்ளை என்பது மூங்கைப்பிள்ளை எனப் படிக்கப்பட்டதோ?   

பைங்கண்ணன் பைங்கண்ணன் என்னும் சொல் பரிபாடல் 5ல்: ".. .மாதிரம் அழல எய்து அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பன் உமையொடு புணர்ந்து காம வதுவையுள் அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி இமையா நாட்டத்து ஒருவரம் கொண்டு விலங்கு என விண்ணோர் வேள்வி முதல்வன் விரிகதிர் மணிப்பூணவற்குத் தான் ஈத்தது அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின்; எரிகனன்று ஆனாக் குடாரிகொண்டு அவன்உருவு திரித்திட்டோன்; இவ்உலகு ஏழும் மருள கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசேய் யாக்கை நொசிப்பின் .. .நிவந்தோங்கு இமையத்து நீலப்பைஞ்சுனைப் பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்; பெரும்பெயர் முருக! நிற்பயந்த ஞான்றே அரிதுஅமர் சிறப்பின் அமரர்செல் வன்தன் எரியுமிழ் வச்சிரம்கொண்டு இகந்துவந்து எறிந்தெ அறுவேறு துணியும் அறுவர் ஆகிய ஒருவனே வாழி ஒங்குவிறல் சேஎய்! ..” என்ற பாடலில் பைங்கட் பார்ப்பான் என இடம்பெற்றுள்ளது புன்மயிர் புன்மயிர் என்ற சொல் சிலப்பதிகாரத்தில்: " 'புன்மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை, முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து இருபிறப் பாளரொடு பெருமலை அரசன் .. ." என இமையவன் குறிப்பிடப்படுகிறான்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்கைப்பிள்ளை&oldid=1213126" இலிருந்து மீள்விக்கப்பட்டது