உள்ளடக்கத்துக்குச் செல்

முருந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முருந்து, பெயர்ச்சொல்.
  1. பூவின் தாள்
    (எ. கா.) பூமுருந்துங் குருந்துஞ் செருந்தும் பொருந்து மூட்டுடன் (குருகூர்ப். 6)
  2. இறகினடிக்குருத்து
  3. மயிலிறகினடிக்குருத்து.
    முருந்தேய்க்கு முட்போ லெயிற்றினாய் (ஏலா. 7)
  4. தென்னை முதலியவற்றின் அடி வெண்குருத்து. (சூடா.)
  5. கொழுந்து. (சங். அக.)
  6. இளந்தளிர்
  7. வேரின் மேற்றண்டு.
    பைஞ் சாய்க் கோரையின் முருந்தினன்ன (அகநா. 62)
  8. இளவெலும்பு
  9. எலும்பு
    முருந்தின் காறுங் கூழையை (சீவக. 1661)
  10. வெண்மை. (சூடா.)
  11. முத்து

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - muruntu
  1. stalk of flower
  2. Quill of a feather
  3. Root of peacock's feather
  4. White and fresh sprout of a palm
  5. Tendril
  6. Tender leaf
  7. Stalk of plant just above the roots
  8. Cartilage, tendon;
  9. Bone
  10. Whiteness
  11. Pearl


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முருந்து&oldid=1390843" இலிருந்து மீள்விக்கப்பட்டது