முழங்கால் முறிச்சான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அலிப்பிரி நடைப்பாதைக்கு நுழைவு வாயில்
செங்குத்தான நடைப்பாதையும் உயரமான படிகளும்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

முழங்கால் முறிச்சான், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. திருப்பதியில் திருமலைக்குப் போக அலிப்பிரியில் துவங்கும் மலையேறும் நடைப்பாதை.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a part of walkway with high steps to tirumala hills at alipiri(tirupati).

விளக்கம்[தொகு]

  • திருப்பதியிலிருந்து திருமலைக்கு மலையேற அலிப்பிரி எனும் இடத்திலிருந்து துவங்கும் நடைப்பாதை...இது மலையேற படிகளுடன் கூடியது...மிகவும் செங்குத்தாக இருக்கும் இந்தப்பாதையில் ஏறும் படிகளும் உயரமானவை...சற்று தூரத்தில் இருக்கும் காலி கோபுரம் என்னும் இடம் வரை இப்படித்தான் இருக்கும். வயதானவர்கள், சிறுவர் சிறுமியர், நோயுற்றவர்கள், பலகீனமானவர்கள் ஆகியோருக்கு இங்கு படி ஏறுவது சிரமமான காரியம்தான்...காலி கோபுரம் போய் சேர்வதற்குள் முழங்கால்களில் கடும் வலி ஏற்பட்டுவிடும்...இவர்கள் ஆங்காங்கே ஓய்வு எடுத்துக்கொண்டுதான் மேற்கொண்டு ஏறமுடியும்...இந்த மலை ஏறும் பாதையில் காலி கோபுரம் வரையிலானப் பகுதியை 'முழங்கால் முறிச்சான்' எனக் குறிப்பிடுவது வழக்கம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=முழங்கால்_முறிச்சான்&oldid=1219266" இலிருந்து மீள்விக்கப்பட்டது