மூட்டை கட்டல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மூட்டை கட்டல்

சொல் பொருள் விளக்கம்

ஓர் ஊரில் இருந்து வேற்றூர் செல்வார் தோட்கோப்புக் கொண்டு செல்லல் முந்தை வழக்கு. தோட்கோப்பு ‘கட்டு சோறு’ எனவும் வழங்கும். சோற்று மூட்டை என்பதும் அது. சோற்று மூட்டை கட்டினால் வேற்றூர்ச் செலவுண்டு என்பது வெளிப்படை. இனி வேற்றூரில் நிலையாகத் தங்கச் செல்வார் தம் உடைமைகளை மூட்டை கட்டிக்கொண்டு போதல் உண்டு. பெட்டியில் போட்டாலும், உந்துகளில், தொடரிகளில் கொண்டு சென்றாலும் மூட்டை முடிச்சுகளே அவை. ஆதலால் மூட்டை கட்டல் என்பது இடம் விட்டுப் புறப்படல் பொருளில் வழங்குகின்றது. ஓயாது இடமாறிச் செல்வார் “மூட்டை கட்டுவதே என் பிழைப்பாகிவிட்டது” என்பதுண்டு.

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூட்டை_கட்டல்&oldid=1969097" இலிருந்து மீள்விக்கப்பட்டது