ராதை
Appearance
தொல்காப்பியம் ,மாயோன் மேய மைவரை உலகம் என்று காடும்காடுசார் நிலமுமாகிய முல்லை நிலத்தின் கடவுள் திருமால் என்கிறது. சீதக்கடலுள் அமுது அன்ன தேவகி வயிற்றில் அத்தத்தின் பத்தாம்நாள் திருவோணத்திருநாளில் கண்ணன் பிறந்தான் என்கிறார் பெரியாழ்வார்.அவர் நப்பின்னை என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.பன்னிரு ஆழ்வார் பாசுரங்களில் யாண்டும் இப்பெயர் கையாளப்படவில்லை.பாரதியும் கண்ணம்மா என்ற சொல்லைத்தான் கையாள்கிறார்.கம்பராமாயணத்தில் இப்பெயர் இடம்பெறவில்லை.கோகுலம் தமிழில் ஆயர்பாடி என்றும் ராதை நப்பின்னை என்றும் மொழியப்பட்டுள்ளது.வில்லிபுத்தூராரின் பாரதத்தில் முதல்முறையாக வருகிறது.