வடகலை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வடகலை, .
பொருள்
[தொகு]- ஒரு வைணவ மத உட்பிரிவு
- வடமொழி நூல்கள்
- சமசுகிருத மொழி
- வடகலையார் நெற்றியில் அணியும் திருமண் (நாமம்)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a sub-sect of Srivaishnavites, a hindu religion
- sanskrit literature
- sanskrit language
- religious sign of 'vadakalai' srivaishnavites worn on forehead (namam)
விளக்கம்
[தொகு]- வட(க்கு) + கலை = வடகலை...இந்து சமயத்தின் ஆறு முக்கியக் கிளைகளின் ஒன்று திருமாலை முதற்கடவுளாக வழிபடும் வைணவம்...இந்தச் சமயத்தினரில் ஒரு பிரிவு வடகலையார் (வடகலை) எனப்படுவோர் ஆவர்...இவர்களுக்குத் திருமாலும் திருமகளும் சரிசமானமாக பூசைக்கும், வழிபாட்டிற்கும், பக்தி செலுத்துவதற்கும் உரியவர்கள்...பண்டைய வடநாட்டு வைணவ சம்பிரதாயங்களைப் பெரிதும் கடைபிடிப்பவர்கள்...தமிழும், சமசுகிருத மொழியும் தமிழ்நாட்டு வைணவத்திற்கு இரு கண்களைப்போல என்றாலும், அன்றாட வழிபாட்டில் இச்சமயத்தினர் வடமொழிக்குச் சற்று ஏற்றம் கொடுப்பர்...மற்றொரு உட்பிரிவினரான தென்கலை வைணவர்களுக்கும் இந்த வடகலை வைணவர்களுக்கும் சுமார் பதினெட்டு வேறுபாடுகள் உள்ளனவாகக் கூறுவர்...வடகலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் திருநாமம், ஆங்கில எழுத்து 'U' போல இறுபுறமும் வெள்ளை நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்தில் ஒரு நேர்க்கோடு கொண்டதாயும் இருக்கும்...தற்போது பொதுவாக ஸ்ரீசூர்ணப் பொடியால் சிவப்பு நிறத்திலேயே அந்த நடுக்கோடு அணியப்படுகிறது...