உள்ளடக்கத்துக்குச் செல்

வடைகறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வடைகறி செய்யப் பயன்படும் மெதுவடை
வடைகறி செய்யப் பயன்படும் மசால்வடை
வடைகறி செய்யப் பயன்படும் போண்டா
வடைகறி செய்யப் பயன்படும் பஜ்ஜி
வடைகறி செய்யப் பயன்படும் பக்கோடா

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
(கோப்பு)

வடைகறி, .

பொருள்

[தொகு]
  1. பழைய வடைகளைப் புதுப்பித்த உணவு.


மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. renewed food made of old unsold food items in hotels.


விளக்கம்

[தொகு]
வடை + கறி = வடைகறி...வடையை கறியாக்கினால் அது வடைகறி...வடைகறி செய்யப் புதியதாக வடைகளைச் சுட்டுக்கொண்டு இருக்கமாட்டார்கள்...உணவகங்களில் ஒரு நாள் செய்த மெதுவடை, மசால் வடை, போண்டா, பஜ்ஜி, பக்கோடா போன்ற சிற்றுண்டிகள் அன்றைய தினமே முற்றும் விற்றுப் போகாமலிருந்தால் அவற்றை வீணடிக்காமல் மறுநாள் புதுப்பித்து விற்றுவிடுவர்...ஏலக்காய், இலவங்கம், இலவங்கப்பட்டை, பிரியாணி இலைகள்,பச்சை மிளகாய்த் துண்டுகள் இவைகளைச் சற்று எண்ணெயில் வறுத்து, அதோடு பொடிப்பொடியாக அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி, வெள்ளைப்பூண்டையும் அரைத்துக்கொட்டிக் கலந்து, அதில் விற்பனையாகாத வடை முதலியனவற்றை உருத்தெரியாமல் பிசைந்து சேர்த்துக் கொஞ்சம் புளிக்கரைத்த நீரையும் விட்டு, தேவையான உப்பு, மிளகாய்ப்பொடி போட்டு மிக நன்றாகக் கொத்திக் கிளறி வேகவிட்டு எடுப்பர்...இப்படி வடைகளால் ஆன வடைகறி மிகுந்த சுவையோடு இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுகளுக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும்...இப்படி வடைகறி செய்து விற்பது தற்போது மிகவும் குறைந்துவிட்டதால் எல்லாம் புதியதாகவே, பருப்பு இட்லிகளைச் செய்து, அதே சுவையுடன் தயாரிக்க புதிய வடைகறிப் பக்குவங்கள் வந்துவிட்டன...இதே போன்று வெகுநாட்களாக விற்பனையாகாத மைசூர்பாகு, பாதுஷா போன்ற இனிப்பு உணவுகளைக்கொண்டு மக்மல்பூரி என்னும் உணவைத் தயாரித்து விற்பர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வடைகறி&oldid=1885503" இலிருந்து மீள்விக்கப்பட்டது