வரமிளகாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

வரமிளகாய்:
(கோப்பு)

பொருள்[தொகு]

  • வரமிளகாய், பெயர்ச்சொல்.
  1. உலர்ந்த சிவப்பு மிளகாய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. dried red chilly

விளக்கம்[தொகு]

  • பழுத்த, சிவப்பு மிளகாயை உலர்த்தி சமையலுக்கேற்றபடி பக்குவம் செய்து, விற்பனைக்கு வரும்போது அதை வரமிளகாய் என்பர்...சிறப்பாக இந்தியச் சமையலில் ஊறுகாய், பொடி போன்றவைகளைச் செய்ய, பொரியல், கூட்டமுது போன்ற உணவுகளுக்குக் காரச் சுவையூட்ட என பலவிதமாகப் பயனாகிறது...வரமிளகாயில் உயிர்ச்சத்து ஏ. பி, சி போன்றவை அதிகம் இருக்கின்றன...வரமிளகாய் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேராமலும், சேர்ந்த கொழுப்பைக் கரைத்தும், உடலின் எடையை குறைக்கும் எனக் கருதப்படுகிறது...இது பசி தீபனத்தை உண்டாக்கும்...உடற்வெப்பத்தை ஏற்படுத்துமாதலால் அளவறிந்து பயன்படுத்தல் நலமாகும்...மூலநோய்க் காரர்களுக்கு அறவே ஆகாது...வரமிளகாயைக்கொண்டு மிளகாய்த்தைலம் காய்ச்சி, வாரமொருமுறை தலைகுளித்து எல்லாவிதமான தலைவலிகளையும் போக்கிக்கொள்வர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வரமிளகாய்&oldid=1986576" இலிருந்து மீள்விக்கப்பட்டது