வருணதேவன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வருணதேவன், .
பொருள்
[தொகு]- தண்ணீருக்கு அதிபதியாகிய வருணன்... உலகைக் கண்காணிப்பவர்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- lord varuna, a hindu regent (devata) of water resources of any kind in the world and also supervisor of the mankind.
விளக்கம்
[தொகு]- இந்து மதத்தில் அனைத்து இயற்கைச் சக்திகளுமே தேவதைகளாகக் கொண்டாடப்படுகின்றன...அந்தவகையில் உலகின் அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதத் தண்ணீரைப் போற்றுவற்காக அதன் தேவதையான வருணதேவன் வணங்கப்படுகிறார்...இவர் வான் மற்றும் கடல்,மேகம், மழை,ஆறு, ஏரி,குளம் முதலிய எல்லாத் தண்ணீர் தொடர்பான விடயங்களுக்கும் தேவதை...மகரம் எனப்படும் முதலையே இவரது வாகனம்...வேதங்களில் கூறப்பட்ட வான்/வான்வெளிக் கடவுளும், தேவதைகளின் தாயுமான அதிதி என்னும் பெண் தெய்வத்தின் பன்னியிரண்டு பிள்ளைகளில்(ஆதித்தர்கள்) ஒருவர்...இந்த ஆதித்தர்களின் தலைவர் வருண தேவன்...ஆதித்தர்களே உலகின் அருகில் இருந்துக்கொண்டு உலகை இயக்கும் தேவதைகளாவர்... இறையுலகால் மனித சமுதாயத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம், ஒழுங்குமுறைகளைச் சரியாக நடைபெறுகிறதா என்று கண்காணிக்கும் தேவதையாகவும் வருண தேவன் விளங்குகிறார்...ஆயிரக்கணக்கான விண்மீன்களே இந்தச் செயலுக்கு துப்பறியும் கண்களாக இவருக்கு அமைகின்றன...வேதகால முற்பகுதிகளில் இவரே தனிப்பெரும் பெருமை வாய்ந்த முதற் தேவதையாகப் போற்றப்பட்டார்...வேதகால பிற்பகுதியில்தான் இந்திரனுக்கு முக்கியத்துவம் வந்தது...தமிழ் இலக்கியங்களில் 'நெய்தல்' எனப்படும் கடலும், கடலைச்சார்ந்த நிலப்பகுதிக்கு இறைவனாகக் குறிப்பிடப்படுகிறார்...எண்திசைக் காவலர்களில் ஒருவரான வருண தேவன், மேற்குத் திசைக்குப் பொறுப்பானவர்...