வரைப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • வரைப்பு, பெயர்ச்சொல்.
 1. எழுதுகை
  (எ. கா.) வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும் (பெருங். உஞ்சைக். 34, 168)
 2. எல்லை
  (எ. கா.) இடைநில வரைப்பின் (மணி. 28, 24)
 3. மதில்
  (எ. கா.) அருங்கடி வரைப்பி னூர்கவி னழிய (பட்டினப். 269)
 4. சுவர் சூழ்ந்த இடம் (சீவக. 949, உரை)
 5. மாளிகை
  (எ. கா.) துணையோடு திளைக்கும் காப்புடை வரைப்பின் (அகநா. 34)
 6. உலகம்
  (எ. கா.) தண்கடல் வரைப்பில் (பெரும்பாண். 18)
 7. குளம்
  (எ. கா.) புனல்வரைப் பகம் புகுந்தோறும் (பொருந. 240)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. Writing Limit, boundary Wall of a fort or temple Enclosed space, courtyard Mansion World Tank


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரைப்பு&oldid=1347746" இருந்து மீள்விக்கப்பட்டது