வர்த்திவைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வர்த்திவைத்தல்

சொல் பொருள் விளக்கம்

வர்த்தி, மெழுகுவர்த்தி, தீவர்த்தி முதலியவை. ஒன்றைப் பற்ற வைத்து அவ்வொன்றால் பலப்பலவற்றைப் பற்ற வைப்பது போன்றது வர்த்தி வைத்தல். ஒரு செய்தி ஆங்காங்குச் சென்று பலப்பலருக்கும் சொல்லப்பட்டு, அவ்வவரை எரியச் செய்தல் வர்த்தி வைத்தலாக வழங்குகின்றதாம். மெழுகுதிரி, விளக்கு ஆகியவை சுடரொளி பரப்பி இருட்பகை ஒழிப்பது போல்வதோ இவ்வர்த்தி! அமைதியாகவும், ஒன்று பட்டும் இருந்த வரை உள்ளெரிவுக் காளாக்கி உருக்குலைக்கும் தீமையுடையதாம் இவ்வர்த்தி வைத்தல், “வர்த்திவைக்க வில்லையானால் உனக்கு வயிறு எரியுமே “என்பது வழக்கு. பிறரை எரிய வைக்கா விட்டால் தனக்கு எரிவு எனின் வர்த்தியான் எத்தகையன்?

"https://ta.wiktionary.org/w/index.php?title=வர்த்திவைத்தல்&oldid=1912990" இலிருந்து மீள்விக்கப்பட்டது