உள்ளடக்கத்துக்குச் செல்

வலந்தலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தியாவின் கேரளா மாநிலத்திற்க்கே சொந்தமான பண்பாட்டு இசைக்கருவி செண்டை மேளம். இதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று இடந்தலை மற்றயது வலந்தலை. இரு தடிகள் கொண்டு கொட்டுகின்ற பக்கம் இடந்தலை. கீழே இருக்கும் மற்றைய பக்கம் வலந்தலை. வளைக்கப்பட்ட செண்டை வட்டத்தில் தடிப்பு கூடிய காளை மாட்டினுடைய தோல் கொண்டு அடி வட்டமாகிய வலந்தலை தயாரிக்கப்படுகின்றது.

ஒன்றன் மேல் ஒன்றாக சப்த ஈஸ்வரங்கள் வெளிப்பட வேண்டும் என்பதற்காக ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு தோல்கள் ஓட்டப்படுகின்றன. ஓட்டுவதற்காக இலவம் பசை பயன்படுத்தப்படுகின்றது. இலவு மரத்தின் காய்களை உரலில் இட்டு குற்றி அதில் வரும் சாற்றினை இலவம் பசை என்கிறோம்.

ஏழு தோல்கள் கொண்டு மிக கவனமாக ஓட்ட வேண்டும். இதில் 12 துளைகள் இட்டு வலந்தலை இடந்தலை இரண்டிற்கும் இடையே செண்டை குற்றி வைத்து காளை மாட்டு தோல் வார் கொண்டு இரு தலைகளும் இணைக்கப்படும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலந்தலை&oldid=1893636" இலிருந்து மீள்விக்கப்பட்டது