வலையர்
" வலையார்கள் " தமிழ் வரலாற்றில் ஆதி அரசகுடி முத்தரையர் சமுதாயத்தின் மூத்த தலைமுறையாக சங்க இலக்கிய வரலாறுகள் கூறும் மூத்தகுடி மக்கள் ஆவார்கள். 2000 வருடத்திற்கு முன்னரே வலையார் இனக்குழுவாக - ஆதி மீனவர்கள் (வலைஞர்) எனும் தொன்மையான அடையாளம் புகழுடன் திகழ்ந்த பெருமைமிகுந்த முதுதமிழர்கள் இவர்கள். தமிழினத்தின் மூத்தகுடி 'வலையார்கள்' பண்டைய பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே வலையையும், வளைதடியையும் (வளரி) உருவாக்கி தம் வாழ்வியலில் பயன்படுத்திய தமிழ் முன்னோர்கள் எனும் வரலாற்று சிறப்புமிக்கவர்.
ஆதி மீனவர்களான வலையார் மக்கள் தமிழினத்தின் தொன்ம தொழில்முறை கண்டறிந்து வலையினை வடிவமைத்து முதன்முதலில் முறையே கடலிலும், வளரியை உருவாக்கி முறையே களத்திலும், போர் தரணியிலும் வீசிய தனிச்சிறப்பு வரலாற்றுப் புகழ் உடையவர்கள். இந்த பழங்குடி வீரத்தமிழர்களை பற்றி ஆயிரம் ஆயிரமாய் வரலாற்று இலக்கிய சான்றுகள் புகழ்ந்து போற்றிய பெருமைகள் தமிழ் வரலாற்றிலே பல உண்டு.
இத்தகைய தனித்தோர் சிறப்புமிக்க வரலாற்றால் வலைஞர், வலையார்-வளவர், வலைஎறியர், வளரியார், வல்லமார், வலையான், வலையமார்கள் என்ற புகழ்பெயர்களும் பெற்று பெருமைமிக்க மூத்தகுடியாக தமிழகம் உட்பட இந்திய திருநாட்டில் பெருவாரியாக வாழ்கின்றனர்.
வலையார், வலைஞர் என்போர் முற்காலத்தில் வலையையும், வளரி(வளைதடி) யையும் முதன் முதலில் அறிந்து முறையே கடலிலும் களத்திலும் வீசிய,வரலாற்று புகழ் உடையவர்கள் அதற்கு ஆயிரம் ஆயிரமாய் இலக்கியச் சான்றுகள் தமிழிலே உண்டு. இம்மக்கள் தமிழகத்தில்.மதுரை, தேனி,சிவகங்கை,ராமநாதபுரம்,கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பரவி வாழும் ஒரு இனக்குழுவினராவர். இவர்கள் முத்தரையர் சமூகத்தில் உள்ள 29 பிரிவில் ஒருவராவர். சங்க காலத்தில் வலையினைப் பயன்படுத்தி பரதவர்களை போல மீன்பிடித்தல் மற்றும் முத்துக்குளித்தல் ஆகிய தொழில்களை செய்து வந்து நெய்தல் நிலக்குடிகளாயினர்.