வாதுமை எண்ணெய்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வாதுமை எண்ணெய்,
- Amygdalus Communis--Seed oil (தாவரவியல் பெயர்)
பொருள்
[தொகு]- வாதுமைவித்தின் எண்ணெய்
- பாதாம் எண்ணெய்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- almond oil
விளக்கம்
[தொகு]- இந்த எண்ணெய் வாதுமை என்கிற பாதாம் வித்துகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது...இந்த என்ணெய்யை உடல் முழுவதும் ஒரே சீராகத் தேய்த்துப் பூசி சற்று ஊறியபிறகுக் குளித்துவந்தால் தோல் மிகக் கவர்ச்சிகரமாக மினுமினுப்பாக ஆகும்... தோலில் காணப்படும் சிறு புண்கள், கீறல்கள் ஆகியவைகளைப் போக்கி நமைச்சலையும்,எரிச்சலையும் நீக்கும்....தலை முடியில் தேய்த்துக் குளித்துவந்தால் முடியை நன்கு பாதுகாக்கும்... இதை உச்சிக்குத் தடவி வந்தால் கண் எரிச்சல் நீங்கும்...மருந்துகளின் வீறினாலும் அதிக உழைப்பாலும் ஏற்பட்டச் சூட்டைப் போக்கும்...மூக்கினுள் வரும் இரணங்களுக்கு இதை இரண்டொரு சொட்டு அடிக்கடி விட்டுக்கொண்டுவர ஆறும்...மேலும் இந்த எண்ணெய் மரத்தினாலான ஊதும் இசைக்கருவிகளைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது...இனிப்பு வாதுமை எண்ணெய், கசப்பு வாதுமை எண்ணெய் என இதில் இரண்டுவகை உண்டு...உணவுப்பொருள்களில் சேர்க்க இனிப்பு வகையையும், மற்ற காரியங்களுக்குக் கசப்பு வகையையும் பயன்படுத்துவர்.