உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு:காலனியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒரு தேசம் தனது தேசத்தின் இலாபத்திற்காக மற்றொரு தேசத்தை இராணுவப் படையெடுப்பின் மூலம் கைப்பற்றி ஆளுவதற்கான கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளைக் குறிக்கும் ஒரு சொல்லே காலனியம் அல்லது குடியேற்றக்கொள்கை. 14-ஆம்நூற்றாண்டைச் சோ்ந்த colonia "farm, settlement" என்கிற சொல்லினடியாகப் பிறந்த சொல்.

குடியேற்ற நிலங்களின் ஆற்றல் மூலங்கள், உற்பத்திச் சக்திகள் மற்றும் சந்தைகளை கையகப்படுத்தி தனது ஆட்சி அதிகாரத்தையும் பண்பாட்டையும் குடியேறிய தேசம் நிறுவுகிறது (பார்க்க:பண்பாட்டு ஏகாதிபத்தியம்). குடியேற்றக் கொள்கையின் விளைவாக எஜமான நாடுகள் தங்களை ஏகாதிபத்தியம் ஆக வளர்த்துக் கொள்கின்றன. 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டில் உருவான இனவாதம்,மண்டையோட்டியல் போன்ற விஞ்ஞானவாதம் ஆகியவற்றால் உருவான இனவாதக் கொள்கை அடிப்படையில் இக்கோட்பாடானது குடியேற்ற நாடுகளின் இனம் குடியேறிய நாடுகளின் இனத்தைவிட தாழந்தது என்கிற பார்வையை கொண்டிருந்தது. மேற்திசையுலக நாடுகளே குடியேறிய நாடுகளாக இருந்ததால், அந்நாடுகளைச் சொ்ந்த வெள்ளை இனமே மேலான இனம் எனகிற பார்வையை கட்டமைத்தன. இக்கொள்கை நீண்ட வரலாற்றைக் கொண்டது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=வார்ப்புரு:காலனியம்&oldid=171043" இலிருந்து மீள்விக்கப்பட்டது